சிறுகூடலில் மொழிக் கூடல்!
கவிதை தன்னை அழகு படுத்தியது கண்ணதாசனைக் கொண்டு !
கண்ணதாசனும் கவிதையும் இலக்கண அடிப்படையில் இரட்டைக் கிளவிகள் !
உள்ளத்தைக் கூறினார் – அவர் உள்ளதைக் கூறினார் !
பெண்ணுலகில் இறந்து மண்ணுலகில் பிறந்தார் !
தூரிகையைக் காரிகையாய்க்
காதலித்தார் !
தன் எழுத்துக்களின் எலும்புகளில் இறைமைக்கும் உருக் கொடுத்தார் !
கருணைக் கர்ணன் காயத்தில் வார்த்தை மருந்திட்டார் !
இறை கழுத்தில் இருந்த பாம்புக்கு சிறை விரித்த கருட வடிவில் கண்ணியமாய்ப் பதில் தந்தாய் !
எழுத்துக்கு மாத்திரை உண்டென்று நாம் அறிவோம் !
மயக்கம் கொண்ட மனதுக்கு எழுத்தென்ற மாத்திரையை கவித்தேனில் தொட்டுக் கொடுத்தாய் !
துன்பத்தையும் சிரிக்க வைத்தாய் !
துன்பம் எனும் தூசுபட்ட உள்ளத்தை உதறி உலர்த்தும் உன்னத வரிகள் உம்முடையவை !
