த.ரா.ஜமுனா.
உதவிப் பேராசிரியர்,
பக்தவத்சலம் நினைவு
மகளி்ர் கல்லூரி,
த.ரா.ஜமுனா.
உதவிப் பேராசிரியர்,
பக்தவத்சலம் நினைவு
மகளி்ர் கல்லூரி,
கொரட்டூர்,
சென்னை – 600 080.
தலைமுறைகளைத் தாண்டி வாழும் கண்ணதாசன் படைப்புகள்
முன்னுரை:
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் திரைப்பட பாடல்கள், கவிதைகள், நாவல்கள்,
காப்பியம் என இலக்கிய வகைகள் பலவற்றிலும் தன்னுடைய ஆளுமையை
வெளிப்படுத்தி உள்ளார். அவரது படைப்பு காலம் கடந்து வாழும் பொக்கிஷங்கள் ஆகும்.
அவ்வாறான படைப்புகளில் தலைமுறைகளைத் தாண்டி வாழும் அவரது கருத்துக்களை
கட்டுரையின் வாயிலாகக் காணலாம்.
அனுபவம் என்பது யாது:
நம் வாழ்வில் அடைந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் திரட்டி அதிலிருந்து நாம்
பெரும் ஒரு விதமான மனத்தெளிவே அனுபவமாகும். அந்த அனுபவம் சூழ்நிலையைப்
பொறுத்து ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
அந்த அனுபவம் சிறுவர் முதல் பெரியவர் வரை ஏதோ ஒரு விதத்தில் கண்டிப்பாக
பெற்றிருப்பர். நம் கவியரசு எக்காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்தும் வகையில் தன்
கவிதைகளின் மூலமாக அனுபவம் என்பது என்ன என்று மிகத் தெளிவாக
விளக்கியுள்ளார்.
‘அனுபவம் அசிங்கமாகத்தான் இருக்கும்’
‘ அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது
எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே’
‘ அனுபவித்தே தான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
அனுபவம் என்பதே நான் நான்தான் என்றான்’
திரைத்துறையை மெருகேற்றிய இவரது பாடல்கள்:
இன்று காலங்கள் மாறி புதிய தலைமுறைகளின் புரியாத புதிதான ஏதோ
அலறலுக்கு இசைகின்ற இரசனையில்லா இன்றைய உலகில், வாழ்விற்கு தேவையான
மற்றும் செய்ய வேண்டிய அல்லது செய்யக்கூடாத அத்தனை அறங்களையும் தன்
எழுத்துகளின் மூலம் திரைத்துறைக்கு அளித்து பாமர மக்கள் மனங்களின் அறிவு ஒளியை
ஏற்ற வழி வகுத்தவர் நம் கண்ணதாசன் என்று சொன்னால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட உன்னதமான செயலை தன் மனநிறைவோடு செய்தவர் அவர்.
இவர் கைப்பட்டு வந்த பாடல்களை இன்றளவும் கேட்கும்போது உலகின்
உண்மைகளை அப்பட்டமாக புரிந்துக் கொள்ள முடியும்.
‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா’
உயர்வு ஏற்படும் போது தம்முடைய குணம் மாறுபடும் என்பதை மிகத் தெளிவாக இவரது
பாடல்கள் இதுபோன்று பலரும் விளக்குகின்றன
‘அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்’
பணத்தின் பின்பு மனிதன் செல்லும் விதத்தை விமர்சித்தும் மக்கள் தன் தவறை
உணரும்படி செய்தவர் கவியரசர் ஆவார்.
முடிவுரை :
தான் இவ்வுலகை விட்டு சென்றாலும் தன் ஒப்பற்ற எழுத்துக்களின் மூலம் பல
நல்ல உணர்வுகளை மக்களுக்கு உணர்த்திக்கொண்டிருக்கும் கண்ணதாசன் அவர்கள்
என்றும் மக்கள் மனங்களிலிருந்து நீங்காமல் தலைமுறைகளைத் தாண்டித் தன்
படைப்பின் மூலம் அவர் நினைவில் இருப்பார்.
