Poem by…
Dr.
T.K.NAGARAJAN
கவியரசின் கவிமுரசு
சங்கத்தில் சந்தத்தில் சத்தத்தில் சலங்கைக் கட்டி…
பொங்கத்தின் பொற்பதத்தின் பொங்கமுதம் பொருந்தக் கொட்டி
இன்பத்தின் சுரங்கத்தை இதயத்தில் வரிந்து கட்டி…
இமயத்தின் உச்சிக்கும் இரக்கமெனப்
புகழ்மலை கிட்டி…
வங்கத்தின் அங்கத்தை வளைந்தெழுந்த வரிசை விட்டான்…!
சிங்கத்தின் சிலிர்ப்பின் சிறகடித்த சீர்கொட்டி
சொந்தத்தைப் பந்தத்தை விந்தியத்தை
விரியக்கூட்டி…
தந்தத்தைத் தனக்கு ரிமை த் தனிமுத்தை அணிபூட்டிக்
கவிதையா ஜதிபோட்ட கவியரசே கவிதீட்டினான்…!
புவிதையா
புகழ்விதையாக்
கவிமுரசே கணக்கீட்டினான்…!
சிறுகதையா சிற்றிதழா குறும்படைப்பாத் துறைதோறும்…
திரைக்கதையா சரித்திரமா
திறப்படைப்பாத்
திறன்தேறும்…!
பலவிருதும்
பார்முழுதும்
பலர்புகழும் பசிதீரும் !
நிலவிவரும்
நிகழ்பொழுதும் நிழலாடும் படித்தாரும்
அவனெழுத்தும்
அதன்கருத்தும் அகன்றிருக்கும் அதனாழம்
தவமெழுப்பும் தலைநிமிர்த்தும் தகர்த்துநிற்கும் தனிச்சோகம்..!
அழகிருக்கும் வழிநடத்தும் கவியழகின்
எழில்வேகம்…!
பழகிகற்கும்
இசைநிரப்பும் பலவாகும்
பொழில்கானம்…!
உலகிருக்கும்
உடல்இறந்தும் உயிர்த்திருக்கும் கவியரசன்..!
பலம்பலிக்கும்
பாடம்என்னும் சிறுகூடல்பட்டிக்
கவிமுரசம்…!
அவன்கவிதை ஆழப்படி !
அதன்கவினை ஆய்ந்திடடி…!
சிவன்கழுத்து நாகமடி சிறப்புமிகும் சீருமடி…!
புவனத்தின் புகழ்மகுடி புலர்வடையும் போதமடி…!
கவனத்தின் கவரும்படி கவியரசின்
போதம் படி…!!
Poem Submission
Poem by…
Dr.
T.K.NAGARAJAN
VILLUPURAM–INDIA
B.T.Assistant[Special Grade],–TAMIL
Government Highschool
SENNAKUNAM
Villupuram District,–605755
INDIA
Cell : 9790538595
