காலம் வெல்லும் கவிதை தந்தார்!
காலமே நீயாகி கருத்தில் நின்றாய்!
காதலும் உந்தன் கவிதையில் சொன்னாய்!
காதலர் எல்லாம் கனிவுற வைத்தாய்!
கருத்தை உந்தன் கவிதையில் சொன்னாய்!
கருணை பற்றிட கல்மனம் கரைத்தாய்!
காரிருள் போக்க கவிதை படைத்தாய்!
காரியம் நல்லதாய் கடத்த முயன்றாய்!
இலக்கியச் சாராய் இயல்பாய் தந்தாய்!
இலட்சியம் கொண்டே இமயமாய் உயர்ந்தாய்!
இயன்ற மட்டும் இயலைத் தந்தாய்!
இயற்கை என்னும் இறையில் கலந்தாய்!
கண்ணா உந்தன் கவிதை ஓவியம்!
கண்மூடி அமைதியில் கேட்டால் காவியம்!
படைப்பின் சொல் படைத்த தத்துவம்!
படைத்தவன் என்பவன் பட்ட அனுபவம்!
எல்லாம் சொன்னாய் எங்கே சென்றாய்!
எல்லார் மனதிலும் எப்பொழுதும் நின்றாய்!
மகுடம் சூடா மன்னவன் ஆனாய்!
மங்கா புகழ் மனதில் நிறைந்தாய்!
இன்னொரு பிறவி இம்மையில் வேண்டுமா?
இனிதாய் எந்தன் இதயம் ஏற்பாய்!
உம்மைப் போலே உணர்வில் எழுத!
உமக்காய் எந்தன் உயிர் சேர்வாய்!
தன்னை இழந்தே தரணியில் வாழ!
தன்னிகர் தலைவா தட்டாமல் தருவேன்!
கவிதை இலேசா காதில் கேட்டால்!
கவிழ்ந்தே போகும் கணமும் பாட்டால்!
வாழ்க கண்ணா வாழ்க தாசா!
வாழ்வின் நேசா வசந்த தாசா!
நன்றி
முனைவர் இ.ஷீபா
உதவிப் பேராசிரியர்
எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரி
கௌரிவாக்கம்
சென்னை -73
