Poem written by Dr. V.Harivijayadeeba
Assistant professor ,
Department of Tamil
Takshashila University
Ongur Tndivanam.
கவியரசு கண்ணதாசன்
சிவகங்கையிலே
சிறுகூடல்பட்டியிலே
சிற்பியாக உதித்த
முத்துவே, முத்தையா
நீ சாத்தப்பன் விசாலாட்சியின்
சொத்தையா.
நாத்திகனும் ஆத்திகனும்
ஆனவனும் நீ தான்
முரண்பாடுகளின் மூட்டையும் நீதான்
உண்டென்பாய்
பின்பு இல்லை என்பாய்
நீ உரைக்காத பொருள் இல்லை உலகத்திலே.
பிறப்பு முதல் இறப்பு வரை
நீ சொல்லாது விட்ட
சொல்லும் இல்லை.
உன்னைப்போல் சொல்பவரும்
இனி யாரும் இல்லை
கண்ணதாசனே கவிப்பேரரசனே
கவிதைகளால் கட்டிப்போடும்
கவி ராட்சசனே.
உனக்கு எத்தனை பெண்களைத் தான் பிடிக்கும்?
தமிழ் தாயையும் நீ விடவில்லையா?
கோப்பையிலே குடியிருந்தாலும்
கோல மயில்களுடன் நீ இருந்தாலும்
நீ படைத்த படைப்புகள் தான்
எத்தனை ? எத்தனை?
உன் படைப்பு ஆபரணங்களால்
தமிழ்த் தாயை ஆராதிக்கிறாயா?
நன்னிலை தமிழுக்கெனில்
அது உனக்கும் தானே. எனவே
நீ நிரந்தரமானவன் தான்.
தமிழ் தாயைப் போலவே.
கடைசி தமிழன் உயிரோடு உள்ளவரை
உலகில் உன் புகழ் நிலைத்திருக்கும்
இன்று என்னையும் கவிஞன் ஆக்கிய
பெருமையும் உன்னையேச் சேரும்.
வாழ்க உன் புகழ் !வளர்க செந்தமிழ்!
