காவிய நாயகன் ண்ணதாசன்
சாத்தப்பன் விசாலாட்சி சிறுமகன் கண்ணதாசர்!
சிவகங்கை சிறுகூடற் பட்டியில் பிறந்தவர்!
கண்ணனின் புதுமை தாசன் கண்ணதாசன்
காதல்பாடல் பாடுவதில் கவி சக்கரவர்த்தி!
வாழ்வியல் பாடம் வரலாறு சொல்லும்!
வாழ்க்கை வரலாறு வாழ்வியல் வாழ்த்தும்!
போற்றுவார் போற்றினாலும் புலம்ப மாட்டார்!
தூற்றுவார் தூற்றினாலும் துவளாத மனம்கொண்டவர்!
வீடு வரை உறவு கண்டவர்!
வீதி வரை விழா கண்டவர்!
தமிழகத்தின் அரசவைக் கவியின் கவிஞர்!
தமிழ்ப் பதிப்பின் தலைமை பண்பாளர்!
சேரமான் காதலியின் சாகித்திய விருதாளர்!
சிவகங்கைச் சீமையின் சீரிய சிந்தனையாளர்!
இயேசு காவியம் வடித்த இலக்கிய ஆய்வாளர்!
இசை உலகின் ஈடில்லா கதாநாயகர்!
தாலாட்டு பாடும் தாய்மை குணாளர்!
தென்றல் தீண்டும் தேனிசை சொல்லாளர்!
அர்த்தமுள்ள இந்துமதம் அதிசயம் தந்தவர்!
ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம் படைத்தவர்!
கவியரசு பட்டம் காந்த புலமையாளர்!
கண்ணதாசன் இதழை நடத்தி அஞ்சாதவர்!
இயற்றமிழ் இலக்கணம் இனிமை தந்தவர்!
இன்னலைத் தவிர்த்து இன்பம் தந்தவர்!
கிருஷ்ண கானம் கீதையுரை தந்தவர்!
கவிதாஞ்சலி தந்த கமகப் பிரியர்!
ஏழு சுரங்களுக்குள் ஏழிசை கண்டவர்!
ஏழ்மை நிலையில் ஏகாந்தம் கொண்டவர்!
ஆறு மனமே ஆறு மனமே
ஆண்டவன் கட்டளை ஆறு அனுபவம் கண்டவர்!
ஆயிரங்கால் மண்டபம் மணிமண்டபம் கண்டவர்!
ஆறு ஆயிரங்கள் பாடல்களின் சொந்தக்காரர்!
முனைவர் நா. தனலட்சுமி,
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி, குரோம்பேட்டை,
சென்னை
