பாரெங்கும் பாட்டு வண்டி ஓட்டிய பாமணியே வாழ்க!
கவிஞர்களின் கற்பகதருவே வாழ்க!
நூறாண்டு கடந்தாலும் பல கோடி மனங்களில் பாட்டாலே பாராளும் பண்புக் கவிஞர் வாழ்க!
பல காவியங்களை பாமரனுக்கும்
பாட்டாலே புகட்டிய பாவேந்தர் வாழ்க!
பாட்டாளியின் துன்பங்களை பாட்டில் வடித்து கேட்டாலே இனிக்கச் செய்த சொற்சிற்பியே வாழ்க!
சிந்தனை செய்வதற்கும் வாழ்வினைச் சீர்திருத்தவும் பாட்டாலே புத்திச் சொன்ன
பாட்டுடைப் பூட்டனே வாழ்க!
செவியினிக்கப் பாட்டெழுதி சமூகத்தில் அனைவரையும் அன்பு கொள்ளச் செய்த ஆருயிர்க் கவிஞரே வாழ்க!
காந்த வரிக் கவியாலே கட்டிப்போடும் வித்தகக் கவிஞர் கண்ணதாசன் வாழ்க!
கண்ணனைக் கண்டால் இன்பம் கண்ணதாசனின் வரிகளைக் கேட்டாலே பேரின்பம் பேரானந்தமே!
வள்ளுவன் செவிச்செல்வம் எனச் சொன்னதெல்லாம் உன் பாட்டைக் கேட்பதற்கு தானோ?
பல நூற்றாண்டு கடந்தாலும் உன் பாடல்வரிகளே பலரின் மனங்களுக்கு
வளம் சேர்க்கும்! வாழ்வு தரும்!
பார்போற்றும் கவிஞர் கண்ணதாசன் வாழ்க! வாழ்க!
கவிஞர் இரா.திருமூர்த்தி
கரூர், தமிழ்நாடு, இந்தியா
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு
