சிறுகூடல் செழுமையில் செம்மையாய் பிறந்தவர்
செம்மொழி தமிழை அள்ளி தின்றவர்
வாழ்க்கையை புத்தகமாக புரட்டியவர்
வலிகளை வரிகளாய் வித்திட்டவர்
சிரிப்பால் வலியை கண்டவர்
கண்ணீரால் மனம் மாற்றியவர்
தான் பட்டதை கவியில் மொழிந்தவர்
சாகசென்ற மனங்களை விரட்டிப் பிடித்தவர்
கற்பனையால் வாழ்வை நெறிப்படுத்தியவர்
சொல்லுக்கும் வரிக்கும் கருத்துக்கும் உயிர் புகட்ட இவரை மிஞ்சிட யாரும் இல்லை
கண்களில் தென்பட்டதை கவிதை அருவியாய் கொட்டுபவர்
ஆழ்ந்த கருத்துக்கும் சிந்தனைக்கும் சொந்தக்காரர்
தலைவனின் பாடல் வரிகளை கேட்டால் அட அட அட……
காதலால் பிறர் மனதின் கதவை திறப்பவர்
வாழ்வின் வலிகளுக்கு விளக்கம் அளிப்பவர்
தாயின் உன்னத அன்பை தங்கத்தை விட உயர்த்தியவர்
தந்தையின் பாசத்தை வானளவு எட்டியவர்
நட்பினை நயத்தோடு வெளி காட்டுபவர்
பெண்ணைப் பற்றி சுடரொளியாய் எரிந்தவர்
ஆதலால் திரையுலகம் அவரை தேடியது
இசை உலகம் அவரை இழுத்து பிடித்தது
இலக்கியம் அவரை தழுவியது
தமிழ் அவரை கட்டி அணைத்தது
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
என்றவர் யாரோ என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக அவரின் வரிகளே விடையென்று தந்து சென்றவர்
காரைக்குடி காதலன்
தமிழின் தங்கக்குரல் கண்ணதாசன்.
கவிஞர். பா. யாழினி MA.B.Ed
திருவள்ளுவர் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி
குறிஞ்சிப்பாடி,
கடலூர் – 607 302.
