முனைவர் தி.சுமதி M.Sc.,B.Ed.(Maths),M.A.,((YHE),PGDCA.,Ph.D.,(YHE)
உதவிபேராசிரியர், யோகாத்துறை
அதியமான் மகளிர் கலை மற்றும அறிவியல்கல்லூரி, ஊற்றங்கரை
PHONE NO:8608098215
அகத்தியன் தொட்டிலிட்டு, தொல்காப்பியன் தாலாட்டி,
கம்பன் சீராட்டி, மூவேந்தர் பாராட்டி, வருடங்கள் ஈராயிரம்
கடந்தாலும் இன்னும் கண்ணித்தமிழாய் செந்தமிழாய்
வாழ்ந்து வரும் எம் தமிழ் மொழியால் அவையோர்
அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்களையும்
வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
அன்பின் உருவமாய் அறிவின் ஊற்றாய் பண்பின்
சிகரமாய் எளிமையின் வடிவமாய் உழைப்பில் தேனியாய்
தன்னம்பிக்கையின் திறவுகோலாய் வாழ்ந்த கவிஞர்
கண்ணதாசனின் ஆன்மீக சிந்தனைகள் என்ற தலைப்பில்
பேச வந்துள்ளேன்.
“வாழ்வை அறிந்தவன் ஞானி
வாழ்வின் பொருளை
உணர்ந்தவன் யோகி
வாழ்வின் பின்னால்
இருக்கும் இறை உண்மையை
உணர்ந்தவன் ஆன்மீகவாதி “
தமிழ் இலக்கிய உலகில் கவியரசு என்று போற்றப்படும்
கண்ணதாசன் வெறும் திரைப்பட பாடல் ஆசிரியர்
மட்டுமல்ல மனித வாழ்க்கையின் ஆழமான
உண்மைகளை எளிய தமிழில் எடுத்துரைத்த ஆன்மீக
சிந்தனையாளர் ஆவார்.
ஆன்மீகம் என்பது உலகத்தை விட்டு ஓடிச் செல்வது
அல்ல. தன்னை அறிந்து பிறரை நேசித்து இறை
உண்மையை உணர்ந்து வாழ்வதே ஆன்மீகம் இதனை
உணர்த்தும் வகையில்
கோயிலில் தேடினால் சிலை கிடைக்கும்
உள்ளத்தில் தேடினால் இறை கிடைக்கும்
என்ற சிந்தனையை கண்ணதாசன் தனது படைப்புகள்
வழியாக வெளிப்படுத்துகிறார்
அன்பே ஆன்மீகத்தின் அடிப்படை கண்ணதாசனின்
பார்வையில் அன்பே இறைவன்
அன்பு விதைத்த மனங்களில்
அமைதி மலர்கள் பூக்கும்
கருணை கொண்ட இதயங்களில்
கடவுள் குடியிருப்பார்
மனிதனை நேசிப்பதே இறைவனை நேசிப்பதாக
கண்ணதாசன் கருதினார். வாழ்க்கையின் நிலையாமை
மனித வாழ்க்கை நிலையற்றது என்பதை கண்ணதாசன்
மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறார்.
வந்தது வெறும் கையோடு
செல்வதும் வெறும் கையோடு
இடையில் சேர்ப்பது எல்லாம்
இறைவன் தந்த நிழலோடு
எனவே மனிதனின் அகந்தையை விட்டு எளிமையாக
வாழ வேண்டும் என்பதே கண்ணதாசனின் ஆழமான
கருத்தாகும். தன்னறிவும் ஆன்மீகமும் கண்ணதாசன்
கூறும் ஆன்மீகப் பயணம் வெளியில் அல்ல அது நம்
உள்ளத்தில் தொடங்குகிறது.
தன்னை அறிந்த
மனிதனுக்கு
தடைகள் எல்லாம்
படிகள் ஆகும்
இறையை உணர்ந்த
மனிதனுக்கு
இருள் கூட ஒளியாகும்
தன்னம்பிக்கை, தன்னறிவு, மனத் தூய்மை ஆகியவை
ஆன்மீகத்தின் தூண்கள் என்று கண்ணதாசன்
வலியுறுத்துகிறார்.
மனித நேயம்
கண்ணதாசனின் ஆன்மீகம் மற்ற எல்லைகளைக் கடந்த
மனித நேயமாகும்.
மனிதனை நேசிக்காத பக்தி
மலராத மொட்டுவை போன்றது
மனிதனே மனித மதிக்கும்
இதயம் மகேசனை தாங்கும்
கோயில் போன்றது
இறைவன் மனிதர்களின் உள்ளங்களில் வாழ்கிறான் என்ற
உயர்ந்த சிந்தனையை கண்ணதாசன் வெளிப்படுத்துகிறார்.
இன்றைய தலைமுறைக்கு அவர் தரும் பாடம் இன்றைய
உலகில் போட்டி, பதற்றம், தனிமை அதிகரித்துள்ளன
இத்தகைய காலத்தில் கண்ணதாசனின் ஆன்மீக
சிந்தனைகள் நமக்கு அமைதி அன்பு ஒற்றுமை மற்றும்
நம்பிக்கையை கற்றுத் தருகின்றன.
செல்வம் நிலைக்காது
புகழும் நிலைக்காது
அன்பும் அறமும் மட்டுமே
ஆன்மாவின் செல்வமாக
நிலைக்கும்
எனவே கண்ணதாசனின் ஆன்மீக சிந்தனைகள் நமக்கு
இறை நம்பிக்கையை மட்டுமல்ல மனித நேயத்துடன்
வாழும் நெறியும் கற்பிக்கின்றன.
அன்பே இறைவன் அறமே வழிபாடு
மனித நேயமே உயர்ந்த ஆன்மீகம்
என்பதை கண்ணதாசனின் சிந்தனைகளின் சாரம்சமாகும்.
”போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?”
இந்த வரிகள் மனித வாழ்க்கையின் நிலையாமையையும்
பிறப்பு இறப்பின் இயல்பையும் உணர்த்துகின்றன.
”வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ”
என்ற வரிகளின் மூலமாக மனித உறவுகளின்
எல்லையையும் இறுதியில் மனிதன் தனித்து நிற்க
வேண்டிய உண்மைகளையும் உணர்த்துகின்றன.
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
என்ற வரிகளின் மூலமாக மனிதனின் உள்ளார்ந்த
உண்மையை தெரிவிக்கிறார்.
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
அன்பே இறைவனை அடையும் வழி என்று இப்பாடல்
வழிகள் மூலம் எடுத்து இயம்புகிறார்.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை
என்ற வரிகள் மூலமாக இறை நம்பிக்கைக்கு
அமைதிக்கும் சான்றாக இந்த வரிகளை படைத்திருக்கிறார்
கண்ணதாசன்.
வாழ்க்கை ஒரு பயணம்
பிறப்பு அதன் தொடக்கம்
இறப்பு அதன் முடிவல்ல
அது மற்றொரு தொடக்கம்
செல்வம்சேர்க்கும் கைகள்
பல அன்பை சேர்க்கும்
இதயங்கள் பல அந்த சில இதயங்களையே ஆன்மீகத்தின்
சிகரமாக கண்ணதாசன் கண்டுள்ளார். பாடல்களில்
தத்துவம் விதைத்தார். பாமரருக்கும் ஞானம் கொடுத்தார்.
அன்பின் வழியே இறையை காட்டி ஆன்மீக பாதையை
விளக்கிகாட்டியுள்ளார் . மனிதன் வாழும் உள்ளமெல்லாம்
மகேசன் வாழும் கோயில் என்றார் கண்ணதாசன். காட்டிய
வழியில் கருணையோடும் அன்போடும் நடப்போம்.
அறத்தை வாழ்வில் கடைபிடிப்போம். ஆன்மீக ஒளியை
உலகெங்கும் பரப்புவோம்.
அன்பே இறைவன்
அறமே வாழ்க்கை
மனித நேயமே
உயர்ந்த ஆன்மீகம் கோயிலை
கட்டுவது பெரிய சாதனை அல்ல
ஒரு மனிதனின் மனதில்
அன்பை கட்டுவது
தான் மிகப்பெரிய சாதனை
கண்ணதாசனின் பாடல்கள் இசையாக மட்டும்
ஒழிக்கவில்லை வாழ்க்கையை வழிநடத்தும் ஆன்மீக
வேதமாகும் ஒலிக்கின்றன என்ற செய்தியுடன் எனது
உரையை நிறைவு செய்கிறேன். என் நிகழ்வில் கலந்து
கொண்ட அத்துனை உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்நிகழ்வில் கலந்து
கொண்ட அனைவரும் நல்லதொரு உடல்நலம், நீண்ட
ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று
ஓங்கி வாழ வேண்டும் எப்பொழுதும் இறையருளும் குரு
அருளும் துணை புரியட்டும் இவ்வரிய வாய்ப்பை நல்கிய
கத்தார் ஆம்பல் தமிழ் சங்கம் மற்றும் இன்டகரல்
ட்ரைனிங் சென்டர் முனைவர் ரவி கோவிந்தராஜ் ஐயா
அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
கவிஞர் கண்ணதாசனின் ஆன்மீகச் சிந்தனைகள்
DATE:25.6.26
TIME: 7.30 PM
