சங்க இலக்கியத்தின் சாற்றினைப் பிழிந்து /
பக்தி இலக்கியத்தின் பாகோடு சேர்த்து /
சிற்றிலக்கிய சாந்தினைப் பக்குவமாய் பிசைத்து /
பாமரருக்கும் பாட்டாய் தந்தவன் கண்ணதாசன்… 4
கம்பனில் ஒருபாதி இளங்கோவின் மறுபாதி /
வற்றாத வாழ்க்கையினைக் கொத்தாக சொல்லிவைத்த /
வள்ளுவனின் வாரிசு இவனின்றி வேறில்லை /
கண்ணதாசன் என்றாலே கவிதை மணக்கும்… 8
பாரதியும் பாவேந்தனும் பாட்டிலே வருகின்றான் /
சாரதியாய் கீதையினை கீழோர்க்கும் சொல்லுகின்றான் /
பாழாகாப் பைந்தமிழைப் பாரினில் வளர்த்திடவே /
ஊர்ஊராய் பாடிய கவிவேந்தன் கண்ணதாசன்… 12
பெண்ணிலே இருக்கின்ற பெருமைகள் யாவையும் /
உண்மையில் உயர்ந்தவை என்பதை உலகோர்க்கு /
உரைத்திட்ட உண்மையாளன் உலகினில் உண்டெனில் /
புலவோரும் அறிவார்கள் அவன்பெயர் கண்ணதாசன்… 16
கண்ணிலே கண்டதை எல்லாம் கவிதையாக்கி /
மண்ணிலே உயர்ந்தவை எல்லாம் பெருமையாக்கி /
விண்ணிலே இருப்பதை சொல்லிலே விளக்கி /
தன்னிலே இருந்தத் தமிழைத் தந்தவன் கண்ணதாசன்… 20
பட்டப் பாட்டையெல்லாம் பாட்டாக்கி விற்றுவிட்டு /
கோட்டைக்கட்டி வாழாத இராசபாட்டை கண்ணதாசன் /
நாட்டை மனதில் வைத்தே நாள்தோறும் /
நடைமுறையைச் சொல்லிட்ட கவிவேந்தன் கண்ணதாசன்…!
@
முனைவர் பெ.ஜெயச்சந்திரன் (எ)
*குடந்தை வெற்றிநிலவன்*,
கல்லூரி முதல்வர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
ஜெயங்கொண்டம்-621802.
கைப்பேசி- 8248955386.
P.JAYACHANDRAN
ASSISTANT PROFESSOR
DEPARTMENT OF TAMIL
GOVT.ARTS COLLEGE (AUTONOMOUS)
KUMBAKONAM -612 001.
9789348342
