கவிதை : பாரி
சங்க காலத்தில் பறம்பு மலையில் வாழ்ந்தவரே!
வேளிர் குல வலையோன் தலைவனாக விளங்கியவரே!
ஈகை குணத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய மாமன்னரே!
முல்லைக்கு தேர் தந்த வள்ளலே!
கடையேழு வள்ளல்களில் ஒருவராக போற்றப்பட்டவரே!
மூவேந்தர்கள் பாரியை வீழ்த்த நினைத்தார்களே!
மூவேந்தர்கள் பாணர்கள் வேடத்தில் வரம் கேட்டார்களே!
தனது உயிரையும் தரத் துணிந்தவரே!
தனது மகள்களை கபிலரிடம் ஒப்படைத்தவரே!
பாரியின் புகழை நாம் அனைவரும் போற்றுவோமே!
த.சுகந்தி,M.Sc,B.Ed
இல்லத்தரசி மயிலாடுதுறை
