கவிதை : பாரி
பறம்பு மலையில் ஆட்சி செய்தவரே!
பிறப்பால் உயர்ந்து பெருமை அடைந்தவரே!
மாண்புமிக்க மக்கள் போற்றும் வள்ளலே!
உள்ளம் தூய்மையாக காணப்பட்டவரே!
முல்லை கொடிக்கு தேரை கொடுத்தவரே!
சிறந்த தோழன் சொல்லின் கபிரே!
பகைவரை வெல்லும் வீரத்தோடு வாழ்ந்தவரே!
நல்லோர் போற்றும் படி நாட்டை ஆண்டவரே!
வீ.யோகாஸ்ரீ
நான்காம் வகுப்பு
சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி மயிலாடுதுறை
