கடையெழு வள்ளல்களுள் ஒருவனாய்…
கடைச்சங்கத்தில் வாழ்ந்த மன்னனாய்…
பறம்பு மலையினை ஆட்சி செய்தவனாய்..
அங்குள்ள 300 கிராமங்களை சேர்த்து ஆட்சி புரிபவனாய்…
தன்னை தேடி வந்த புலவர்களுக்கு நன்கொடையை கொடுப்பவனாய் …
முல்லை கொடிக்கே தேர் கொடுத்தவனாய்…
வள்ளல் என்ற சிறப்பு பெயர் உடையவனாய்..
கொடை வழங்குவதில் உனக்கு நிகர் இல்லதவனாய் …..
குடிப்பாணர்களின் இசைக்கருவிகள் ஒன்று சேர முழங்கும் போது
காடு கிடுகிடுக்க காண்போர் நடுநடுங்க களமிறங்கி ஆடுபவனாய்….
கொற்றவைக்கு முன் காட்டெருமையை பலியிட்டு மேலெல்லாம்
குருதி பூசி
நிலம் நடுங்க ஆட செய்தவனாய்…
பறம்பியின் எல்லைக்குள் வந்த குலங்களின் கண்ணீர் கிடைக்க வந்தவனாய் ….
ஒரு ஊழியனின் குரலால் .. பெண்மை போற்றும் தலைவனாய்..
அனைத்து பேரையும் தன் கைகளில் கொண்டவனாய் ….
மூவேந்தர்களையும் வியக்க செய்தவனாய்..
அவர்களின் சூழ்ச்சியால் செய்த செயலால் உன் மரணத்தை கொண்டவனாய் …
வீரயுக
நாயகனாய்….
இவ்வுலகமே போற்றும்
தலைவனாய் …..
யாருக்கும் அஞ்சதவனாய் ….
விளங்கும் உன் புகழ் …
என்றும் இம்மண்ணில் நிலைத்து இருக்கும்…
பா. பர்ஜானா
முதுகலை இரண்டாமாண்டு தமிழ்
அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – சீனிவாசா நகர் , ஊற்றங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
