ஆணுக்கும் பெண்ணுக்கும்-வீடு
நாடு இரண்டும் சமே!
சுதந்திரம் என்பது.. தான்
நினைத்தை எல்லாம் செய்வதில்லை!
உனக்கான சரியான வழியை
நீயே தேர்ந்தெடுப்பது…
பெற்றோர் பேச்சைக் கேட்டு
அவர்களின் வழிகாட்டுதல் படி
நடந்தாலே.. அது வீட்டில்
கிடைத்த சுதந்திரம்
அதை பயன்படுத்தி நாட்டில்
நான்கு நல்லது செய்ய
முன்வந்தால்.. அது நாட்டில்
கிடைத்த சுதந்திரம்
உலகத்தில் பிறந்த ஒருவரும்
வீடு, நாடு என்று
பிரித்து பார்க்காமல்- இரண்டையும்
இருகண் என ரசித்தால்
பின் வரும் சமுதாயம்
உன்னை பின்பற்றி..
உன்னால் உலகத்தை ரசிக்க வைக்கும்
உன் சுதந்திரத்தை வீட்டில்
கையில் எடுத்து- நாட்டின்
வளர்ச்சிக்காக பாடுபடு….
அகல்யா. ர
II- Bcom Ca
KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி
