போலியான நபர்களிடமிருந்து
தொலைந்து போய்விடுங்கள்…
முகஸ்துதி பாடுபவர்களிடமிருந்து
தொலைந்து போய்விடுங்கள்…
வன்மம் உள்ளவர்களிடமிருந்து
தொலைந்து போய்விடுங்கள்…
சுயநலவாதிகளிடமிருந்து
தொலைந்து போய்விடுங்கள்…
புறம் பேசுபவர்களிடமிருந்து
தொலைந்து போய்விடுங்கள்…
பாரபட்சம் பார்ப்பவர்களிடமிருந்து
தொலைந்து போய்விடுங்கள்…
சந்தர்ப்பவாதிகளிடமிருந்து
தொலைந்து போய்விடுங்கள்…
ஒழுக்கமற்றவர்களின் நட்பிலிருந்து
தொலைந்து போய்விடுங்கள்…
நிம்மதியாக வாழ,
பல இடங்களிலிருந்து
நீங்களே தொலைந்து போக வேண்டும்…
தொலைந்து போகக்
கற்றுக் கொள்ளுங்கள்…
