முட்டை என்றால் முழுமை.
முட்டை என்றால் புரதச்சத்து.
புதிய தலைமுறையைத் தாங்கிய
உயிர்க்கரு.
“முட்டையா? கோழியா?”
எது முதல்?
என்ற புதிரின் குறியீடு.
அரசுப் பள்ளியின்
அந்த அதீத சத்துணவு.
ஒன்றுமில்லை…
பூஜ்யம் என்பதின் அடையாளம்.
ஊட்டச்சத்து நிறைய பெற்ற
நீள்வட்டம்.
கருமையான காகத்தின்
வெண்மையான வாரிசுப் பெட்டகம்.
பிராமணரும்
ஏற்றுக்கொண்ட
சைவ உணவு.
பூஜ்யத்துக்குள்ளே
புழங்கும்
ஒரு ராஜ்யம்.
பருவமடைந்த பெண்களுக்கு
பக்குவமான உணவு.
சமைத்தாலும்…
சமைக்காவிட்டாலும்…
அரைவேக்காடு ஆனாலும்…
பலரும் விரும்பும்
பகட்டான உணவு.
சரக்குக்கு
சரியான
சைடிஷ்.
