தேசியத் தர மறுமதிப்பீட்டில் A தகுதி பெற்ற மதுரையின் பாத்திமா கல்லூரியின் தமிழ் உயராய்வு மையமும், நவீனத் தமிழாய்வு இதழும் இணைந்து வழங்கிய பன்னாட்டு கருத்தரங்கம்
கவிதைகளில் வாழ்வியல் விழுமியங்களும் பண்பாட்டுக் கூறுகளும் – இன்றைய தலைமுறைக்குத் தேவையான தலைப்பு
ஆம், வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், மெதுவாக மறைந்து வரும் மனிதத்தை சற்றே தூசி தட்டி காலத்தின் வேகத்தில் கடன் என பேசினாலும் கவிதையிலாவது காலம் மறந்து பேசுவோமே என்று உணர்த்தும் வண்ணம்
முதலாம் நூற்றாண்டிலிருந்து, இருப்த்தோறாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கும் பல தலைமுறைகள் கடந்த தமிழை, அது சார்ந்த வாழ்வியல் மற்றும் பண்பாட்டு முறைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் ஒரு ஆழ்ந்த சிந்தனையுடன் இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்த மதுரை பாத்திமா கல்லூரி ஒரு பாராட்டுதலுக்குரிய வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
ஆம், தமிழும் தமிழரும் தமிழ்ச்சமூகமும் ஒரு வாழ்வியல் சதாப்தங்கள், ஓரறிவிலிருந்து ஆறறிவு வரை அத்தனை உயிர்களுக்கும் பொதுவான உலகத்தை பேணிக்காக்க வேண்டிய அடிப்படை அறிவியலை கற்றுத் தந்த பண்பாட்டுச் சமூகம்.
விலங்குகள், பறவைகள், மரங்கள், நுண்ணுயிர்கள், பூச்சிகள் என அனைத்திற்கும் நீர் நிலம் காற்று நெருப்பு சூழல் எனஅனைவருக்கும் பொதுவானது. அதை காக்கும் கடமை, பொறுப்பு மனிதனுக்கு உண்டு என்று அந்த எண்ணத்தை விதைத்தது தமிழ்.அந்தப் பொறுப்பை கவிதைகளாக மாற்றி, பல நூற்றாண்டுகள் கடந்து, மனித நினைவில் நிலை நிறுத்தியது தமிழ் இலக்கிய மரபு.
ஆம், காலங்களை கடந்த கவிதைகளை இணைக்கும் பாலமாக சங்கக் கவிதைகள் மனிதன் தனியாக இல்லை என்றும், அறநூல்கள் ஒழுக்கமே மனிதனை உயர்த்தும் என்றும், பக்தி இலக்கியம் கருணை மனிதனின் அடையாளம் என்றும், காப்பியங்கள் அறம் வீழ்ந்தால் அரசு வீழும் என்றும், நவீன கவிதைகள் சமத்துவம், பெண் விடுதலை, மனித உரிமை என்றும் சமூகத்தின் தேவைகளை முன்வைத்து
இன்று இந்த கவிதைகள் மனிதனை நேருக்கு நேராக நிறுத்தி நாம் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன.இந்த முழுப் பயணத்தையும் ஒரே கல்வித் தளத்தில் இன்றைய மாணவர்களுக்கு கொண்டு வந்ததே இந்த பன்னாட்டு கருத்தரங்கத்தின் வெற்றி. பன்னாட்டு குரல்களைக்கூடிய கல்வி மேடை – இலக்கியங்களில் அறச் சிந்தனைகளைக் குறித்து சிங்கப்பூர் பேராசிரியர் திரு சொக்கலிங்கம் பிரகாசம் அவர்களும்
காலங்களை கடந்த கவிதைகள் குறித்து கத்தார் ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் ரவி கோவிந்தராஜ் அவர்களும்
விளக்க, தமிழ் ஓர் உள்ளூர் மொழி அல்ல அது ஒரு உலக மொழி என்ற உண்மையை இந்த மேடை உறுதியாக சொல்கிறது.ஆம் இது ஒரு நிகழ்ச்சி அல்ல, இது ஒரு அறிவுச் செயற்பாடு, இந்தச் சிறந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்து இன்றைய தலைமுறைக்கு தேவையான அறிவுச் சிந்தனையை உருவாக்கியதற்காக
கல்லூரி செயலர் மாண்புமிகு சகோதரி முனைவர் இக்னேஷியஸ் மேரி அவர்களுக்கும், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் டயானா கிறிஸ்டி அவர்களுக்கும், இணைப் பேராசிரியர் மற்றும் மேனாள் துறைத்தலைவர் முனைவர் க.லதா அவர்களுக்கும் மற்றும் அனைத்து பேராசியர்களுக்கும் இதயம் நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மனப்பூர்வமான நன்றியையும் பகிர்கிறேன்
முனைவர் ரவி கோவிந்தராஜ் கின்னஸ் சாதனையாளர் தலைவர் ஆம்பல் தமிழ்ச்சங்கம்
