அன்பான குடும்பத்தின் அஸ்திவாரம் நீரே
பண்பாய் பாசமாய் வளர்த்தவர் நீரே
உயிர்க் கொடுத்த உத்தமர் நீரே
உயிலெழுதி சொத்தைத் தந்தவரும் நீரே
எங்கே சென்றீர் என்னை விட்டு!
என்னைக் கரைச்சேர்ந்த தோணி நீயே
என் வாழ்வின் வழிகாட்டியாய் இருந்தவரே
என்முதல் எழுத்தாய் என்றும் வாழ்பவரே
என்கண்ணீர் கண்டால் கடலளவு கோபமும்
கரைந்திடுமே
எங்கே சென்றீர் என்னை விட்டு!
பொத்திப் பொத்தி என்னை வளர்த்தவரே
புத்தனாய் புத்திப் போதித்தப் புனிதரே
படிப்படி என்றே பாடம் புகட்டியவரே
பட்டம் நான்பெறவே படாதபாடுப் பட்டவரே
எங்கே சென்றீர் என்னை விட்டு!
மனம் தழும்பிய நினைவு பசுமையாய்
விழி நிரம்பிய கண்ணீர் நன்றியாய்
பாழும் உலகில் பயமற்றுப் பயணிக்கவே
வாழும் கடவுளாய் வந்தென்னைக் காத்தவரே
எங்கே சென்றீர் என்னை விட்டு!
மண்ணில் மறைந்த வேராய் நீயிருக்க
விண்ணை எட்டும் விருட்சமாய் நானிருக்க
என்னை விட்டு ஏன் மறைந்தாய்
என்னைக் காத்த என் தெய்வமே
எங்கே சென்றீர் என்னை விட்டு !
உன்னை நான் காக்க நீயில்லையே
என்னை விட்டு எங்கே சென்றாயோ
இதயக் கோவிலின் இதயத் தெய்வமே
உம்மை என்னாளும் நன்றியோடு வணங்குவேன்.
பெ.சித்ரா இளஞ்செழியன்,திருச்சி
