என் தந்தையார் பிரின்ஸ் ராமு
பழைய ஒன்றிணைந்த செங்கல்பட்டு காஞ்சிபுரம்
மாவட்டத்தின் மதுராந்தகம் மேல்மருவத்தூர் இடையேயுள்ள சிற்றூறான
பாக்கத்தில் முனுசாமி தாயாரம்மாளின் ஐந்தாவது மகன்
தந்தையார் இந்திய தேசிய ராணுவ பணி
பணிச்சூழலால் சென்னை திருவொற்றியூர் பெயரத்தனர்
ஏழ்மையான நிலையிலும் ஆரம்ப கல்வியை அறமாக பயின்றனர்
தொழில் சார்ந்த நகரமானதால் துறைமுகத்தில் பணிவாய்ப்பு
40 ஆண்டுகள் துறைமுகத்தில் ஏறாத கப்பல்கள் இல்லை
கால்படாத இடங்கள் இல்லவே இல்லை
வாரவாரம் அடியேனுக்கு கப்பலை கப்பலில் கடலில் காணும் பாக்கியம்
சாமனியனும் சாதிக்கலாம் என்ற ஆழமான நம்பிக்கை கொண்ட நாயகன்
குடும்பத்தை தாங்கிடும் தூணாக பலமானார்
உறவுகளை பேணிடும் ஊக்கமான தோணியாணார்
கழகத்தினையே தனது மேலான உயிராக்கினார்
கலைஞரையே எந்நாளும் புகழ்ந்திடும் புலவரானார்
இதனாலே என்னை முத்துவேலாக்கி மகிழ்ந்தார்
என் தந்தையை வணங்கி மகிழ்கின்றேன்
முத்துவேலு பிரின்ஸ் ராமு
நிறுவனர்
தாய்மொழி உறவுகள்
