மே 2,2025. சென்னை விமான பயணம் துவங்கி, இலங்கையில் இறங்கி,சொகுசு வாகனத்தில் பயணித்து,மதிய உணவு முடித்து,ஐந்து நட்சத்திர விடுதியில் கடலைப் பார்த்த அறையில் 17ஆவது தளத்தில்,பல்வேறு சிறப்பு அம்சங்கள் அடங்கிய அறையில் தங்க வைக்கப்பட்டு, மாலை செராட்டன் ஐந்து நட்சத்திர விடுதியில் ஆந்திர நடிகர் அலி அவர்கள் முன்னிலையில் சால்சா நடனம், பெல்லி நடனம், இலங்கை கலாச்சார நடனம் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளுடன், அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது,
அடுத்த நாள் காலை, மிகப் பிரம்மாண்டமான அனைத்து நாட்டு உணவுவகைகளையும் அழகாக காலை உணவாக பரிமாறி, பின்னர் இலங்கையின் முக்கிய இடங்களை சுற்றிப்பார்க்க வைத்து, மாலை சிவப்பு கம்பள, மேளதாள வரவேற்புடன் விருது நிகழ்ச்சிக்கு வரவேற்கப்பட்டு
பாண்டிச்சேரி ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும், சாதனையாளருமான முனைவர் வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
பின்னர் வெளிநாடுகளில் நடக்கும் பிரபல கேசினோ சூதாட்ட விடுதியில் கேளிக்கை நடனங்கள், அழகிகளின் மசாஜ் , கனவான்களின் மது, சூது போதைகளுக்கு மத்தியில் அறுசுவை இரவு விருந்து பரிமாறப்பட்டது.
மூன்றாவது நாள் தாயகம் திரும்பும் போது தான் எடுத்து வந்த பணம் சிறிதும் குறையாமல் இருந்ததை
Zero Expenses throughout the India Srilanka Trip என்று சாதனையாளர் குறிப்பிட்டு
இதை ஏற்பாடு செய்த ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் ரவி கோவிந்தராஜ் அவர்களுக்கும்,
நிர்வாக இயக்குநர் முனைவர் நளினி அம்மா அவர்களுக்கும்,
பொருளாளர் மருத்துவர் சத்யநாராயணன் அவர்களுக்கும், செயலாளர் பொறியாளர் விஷ்ணு வர்தன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார்.
முன்னதாக பயணம் துவங்கிய முதல் நாளின் அதிகாலை நேரத்தில் ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் தமிழகத் தலைவர் முனைவர் ராஜமாதா கமலா முருகன் அம்மையார் மற்றும் செய்தியாளர் திரு கேசவன் அவர்களால் இலங்கை புறப்பட்ட அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துரை வழங்கி வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆம்பலின் கர்நாடக மாநில நிர்வாகிகளான சியாம் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் நிறுவன உரிமையாளர்களான முனைவர் சியாமளா, நிர்வாக இயக்குநர் திரு.சந்தீப் முதன்மை தலைமை அதிகாரி செல்வி தக்சிதா ஆகியோரும் இலங்கை பயணத்துக்கு ஆயத்தமான நிலையில் , பயணத்துக்கு முந்தின நாள் கர்நாடக ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் சியாமளா அவர்களின் பாட்டி மறைவை ஒட்டி இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டு இறுதி மரியாதை செலுத்த ஈரோடு சென்றது குறிப்பிடத்தக்கது.





















