அறிமுகம்
“எங்கள் பாரியின் கருணையை விடவா ?” என்ற நீலனின் வினாவிற்குக் கபிலர், சற்று நிலை
குலைந்து தான் போனார்.நீலனுடன் மலைப் பாதையில் நடந்து செல்லும்
கபிலர் கடலைப் பார்த்திருக்கிறாயா? கடல் பரந்து விரிந்தது என்று நீலனிடம் கபிலர் சொல்லியதால்
தான்,நீலன் அந்த வினாவை எழுப்பினான்.பறம்பில் வாழும் மக்கள்
மரபு வழியாக இயற்கையுடன் வாழக்கூடியவர்கள்.அந்நாட்டிற்குள் வருகின்ற ஒரே பொருள் உப்பு
தான்.கபிலருக்கு வேல்முருகன் முதல் வேள்பாரி வரை அறிமுகம் செய்து வைத்தவன் நீலன் மட்டுமே.
நீலன் இணையற்ற மாவீரன் தன் காதலி மயிலாவைக் காண்பதற்காக
தினசரி ஒரு குன்று தாண்டிப் போவான்.முருகன் வள்ளியைக் காண ஆறு குன்றுகள் தாண்டியும்
வள்ளியோ முருகனைக் காண பதினாறு குன்றுகள் தாண்டியும் போனதாய்க் கூறினான்.கபிலருக்கு கால்
வலித்த போது ,அவரை ஒரு பனை மரத்தின் அடியில் உட்காரவைத்துச் செல்கின்றான்.பனை மரம்
பறம்பு நாட்டின் குலச்சின்னம் எந்த ஆபத்தும் நேராது என்பது நீலனுக்கு மட்டுமல்ல பறம்பு நாட்டு
மக்களின் நம்பிக்கை.புலிவால் குகையில் பன்றி ஊணை நீலன் கொடுக்க அதைக் கபிலர் விரும்பிச்
சாப்பிடுகிறார்.நீலன் பாரியின் மனம் கவர்ந்த திசைக் காவல் வீரனாக கடைசி வரைக் களத்தில் நின்ற
மாவீரன் ஆவான்.
அறுபதாங்கோழி வேட்டை
அறுபதாங்கோழி காட்டின் அதிசயங்களில் ஒன்று.கோழியைப் போல்
உடலும்,சேவலைப் போல் வாலும் கொண்டிருக்கும்.அறுவது நாட்களுக்கு ஒரு முட்டையிடும்.அதன்
கழிவில் இருந்து தீப்புல் முளைக்கும்.அறுபாதங்கோழியின் கறித்துண்டு கிடைப்பது அரிது.அது
நினைத்தால் மட்டுமே பிடிபடும்,பிடிபட அது நினைக்கவில்லையென்றால் நிச்சயமாகப்
பிடிபடாது.கடைசியாக பழையனுக்கும் நீலனுக்கும் அறுபதாங்கோழியின் கறித்துண்டு ஆளுக்கு ஒன்று
கிடைத்தது.
நீலன் அகுதை குலத்தைச் சார்ந்தவன்.மருத நிலத்தவன் வாளோடும்
வேலோடும் ஒட்டிப் பிறந்தவன் கொற்றவைக் கூத்திற்குப் பிறகு மருதமர அடியில் மயிலாவின்
மடியில் தலைசாய்த்துக் கிடந்தான் நீலன்.வைகை ஆற்றில் தனது அகுதை குலம் பாண்டியர்களால்
அழிக்கப்பட்டதை எண்ணிக் கொற்றவைக் கூத்தில் பலம் கொண்டு ஆடினான்.
தேவவாக்கு விலங்கை மீட்டல்
இணை சொல்ல முடியாத வேகத்துடன் நீலன் கீழிறங்கிக்
கொண்டிருந்தான்.தேவவாக்கு விலங்கைக் கவர்ந்து செல்லும் வீரர்களைத் துரத்திச் சென்றான்
நீலன்.கூடையுடன் ஒடிய ஒருவனை தனது ஈட்டியால் எறிந்து சாய்த்தான். பறம்பின் அடையாளமாக
இருக்கும் தேவவாக்கு விலங்குகளை பாரியின் தெளிவான திட்டத்தால் மீட்பதற்காக திரையர்களின்
தலைவன் காலம்பன் மற்றும் வீரர்களுடன் நீலனும் கலந்து அடிமைகளைப் போல் சென்றான்.
கையில் விலங்குகளுடன் கூட்டுவண்டிச் சட்டகங்களின் இடைவெளியில் மதுரையை
பார்த்தான் நீலன்.மதுரை அவனுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தது.நீலனின் கண்கள் வைகையைப்
பார்த்தபடி வந்தன.துறைமுகத்தை நெருங்குகையில் யவனர்கள் பாண்டிய நாட்டு நாட்டிய
மங்கையர்களின் நடனத்திலும்,மதுப் போதையிலும் மெய்மறந்த விருந்தில் களித்துக்
கொண்டிருந்தனர்.தேவவாக்கு விலங்குகளைக் கவர்ந்து வந்தால் திரையர்களை விடுதலை செய்கிறேன்
என்று கூறீய பாண்டிய மன்னர் குலசேகர பாண்டியன் தனது வாக்கைக் காப்பாற்றாமல் ஆண்களை
எல்லாம் யவனர்களுக்கு அடிமைகளாக அனுப்பியது காலம்பனுக்கு மேலும் ஆத்திரத்தை
ஏற்படுத்தியது.
பறம்பின் வீரர்கள் மூன்றுபேர் கைகள் பிணைக்கப் பட்டிருந்தாலும்
கழுத்துப் பகுதியில் கட்டியிருந்த நத்தைச்சூரியின் காய்ந்த இலையைக கடித்து மெல்ல
ஆரம்பித்தனர்.அந்தச் சாறு பல்லிடுக்கில் பரவிய சில மணித்துளிகளில் இரும்பைக் கூடக் கடிக்கும்
ஆற்றல் வந்துவிடும்.அவ்வாறு நீலன், காலம்பன்,வீரர்களின் விலங்குகள் உடைக்கப்பட்டு.பால்
கொறண்டியால் தீயினை அத்துறைமுகத்தில் இருந்த அனைத்துக் கப்பல்களிலும் வைத்துவிட்டு
தப்பித்து அரண்மனை சென்று இளமருதனின் ஆலா என்னும் குதிரையில் தேவவாக்கு விலங்குகளை
எடுத்துக்கொண்டு இருளைக் கிழித்துக் கொண்டு பறந்து செல்கிறான். இளமருதன் குறுக்கிட அவன்
தலையைச் சீவி திரையர்களையும்,தேவவாக்கு விலங்கையும் மீண்டும் பாரியிடம் ஒப்படைத்த ஆற்றல்
பெற்றவன் நீலன்.
மயிலாவின் மணாளன்
மயிலாவின் மடியில் தலை வைத்துச் சிற்றோடையில் கால் வைத்துப்
படுத்திருந்த நீலன்,வள்ளியையும் முருகனையும் ஒருசேர மயக்கியது வெடத்தப்பூ என்கிறான்.நீரில்
கரையும் சோமப்பூண்டை விட காற்றில் கரையும் பூவின் மயக்கம் எதிர் கொள்ள முடியாததாக இருக்கும்
என்று மயிலா சொல்ல, பூவோ,மதுவோ எல்லாம் நினைவை உதிரச்செய்யும் மயக்கத்தைத்தான்
உருவாக்கும்.காதல் மட்டும் தான் மயங்க மயங்க நினைவைச் செழிக்கச் செய்யும் என்று நீலன்
கூறினான்.
நீலனையும் மயிலாவையும் ஊரின் நிலைமரமாம் செங்கடம்பு மரத்தின்
அடிவார மேடையில் மயிலம் மலர் மாலையைச் சூடிய போது,மலைகளில் பறித்து வந்த பூக்களை
அவர்கள் மீது மக்கள் பொழிந்தனர்.நீலன் புதுமனை நோக்கி மயிலாவை அழைத்துச் சென்றான்
அவனுக்குப் பின்னால் பாரி,பழையன்,தேக்கன் செல்ல ஆரவாரமும் கேலிப்பேச்சும் பெருக
மயிலாவுடன் மனைக்குள் நுழைந்தான். நீலனுக்கும் மயிலாவுக்கும் அதிசிறந்த பொருளைத் தர நினைத்த
அங்கவை,உதிரன் மணவிழாவிற்கு வராதது ஆதினிக்குச் சற்றுக் கலக்கத்தை உண்டாக்கியது.
குமரிவாகையும்,வள்ளிக்கானமும்
வியத்தகு பறவையாம் கருங்கிளி,அதனைப் பார்ப்பது நல்ல நிமித்தமாக பாரி
எண்ணுகையில் நீலன் வேட்டுவன் பாறையை நோக்கி விரைந்து கொண்டிருந்தான்.வாகை மரத்தில்
முதன் முதலாகப் பூக்கும் குமரிவாகை மலரை மயிலாவுக்குச் சூடுவதற்காக அதைப் பறித்துக் கொண்டு
விரைகிறான்.கருவுற்ற மயிலாவுக்கு விரிந்த மலர்களால் ஆன மாலையைச் சூட்டச் சொல்லி ஆதினி
வழங்க நீலன் சூட்டுகிறான்.அதே போல் ஆதினியும் சூட்டுகிறாள்.வேட்டுவன் பாறையில் இருந்த
பெண்கள் மயிலாவை வள்ளிக்கானம் நோக்கி அழைத்துச் சென்றனர். சந்தனவேங்கை,காட்டின் எந்தத்
திசையிலும் இருக்கக் கூடியதுதான்.ஆனால், கருவுற்ற பெண்ணுக்கான சடங்கைச் செய்ய எந்தச்
சந்தனவேங்கையைத் தேர்வு செய்கிறார்களோ அந்த மரம் இருக்கின்ற பகுதியைத்தான் வள்ளிக்கானம்
என்று சொல்வார்கள்.அங்கு நடக்கும் சடங்குகள் பற்றி எந்த ஆணுக்கும் தெரியாது.பறம்புப் பெண்கள்
இதுவரைக் காத்துவரும் இரகசியமாகவும் உள்ளது.இரவெல்லாம் கூத்து நடத்துகிறார்கள் என்பது
மட்டும் ஆண்கள் அறிவார்கள்.
நீலனின் கிழக்குப்புறத் தாக்குதல்
இருள்சூழ் வேட்டுவன் பாறையில் ஒருபுறம் வள்ளிக்கூத்து நடந்து
கொண்டிருக்க,மறுபுறம் கருங்கைவானனின் வேந்தர் படையை நீலனும் சகவீரர்களும்
அம்புகளாலும்,வேல்களாலும்,பாறைகளை உருட்டிவிட்டும்,மரங்களை வெட்டிச் சாய்த்தும் அவர்கள்
மலைமேல் ஏறாமல் தற்காத்து நின்றார்கள்.வைப்பூர் துறைமுகத்தில தாக்குதல் நடத்தி தனது மகன்
இளமாறனைக் கொலை செய்து, அவனின் ஆலாவைக் கைப்பற்றி வந்தது வேட்டுவன் பாறை
வீரர்களும்,நீலனும் தான் என்ற செய்தியை அறிந்து கொண்ட பின்னர்தான் நாகக்காட்டில் இருக்கும்
நீலன் மயிலாவின் நிறைசூழ் விழாவிற்கு வேட்டுவன் பாறைக்கு வருவான் என உறுதிப்
படுத்திக்கொண்டே மையூர்கிழாரின் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஓர் அரணை உருவாக்கி எல்லோரையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு
எல்லாத் திசைகளிலும் ஒரே நேரத்தில் தீயிட்டான்.தீக்களியை எட்டு வீரர்களின் உடலில் பூசினான்
சோமக்கிழவன்.நெருப்பைப் பிளந்து கொண்டு பறம்பு வீரர்கள் வெளிப்பட்டனர்.இரு கைகளிலும்
வாள்களை ஏந்தியபடி மின்னல் வேகத்தில் சிக்கியவர்களை வெட்டிச் சாய்த்துவிட்டு மீண்டும்
நெருப்புக்குள் புகுந்து மறைந்து கொண்டனர்.மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட செயலாகவே இது
இருந்தது.
நீலனைக் குறிவைத்துக் கருங்கைவானனின் ஆவேசம் இருந்தது.நீலனை
அடையாளம் தெரிந்த இருவரை தன்னுடன் வைத்திருந்தான். உருண்டு வந்த துடிச்சாத்தனின் தலை
கருங்கைவானனின் காலில் வந்து விழுந்தது. திகைத்து நின்ற கருங்கைவானனிடம் அருகில்
இருந்தவன் அச்சத்துடன் சொன்னான் தாக்கிச் சென்றவன் நீலன் என்று.கண்ணெதிரே வந்து திரும்பும்
நீலனைப் பார்த்து கருங்கைவானன் கைநரம்பே அறுந்து போவதைப் போல் ஈட்டியை வீசினான்.
நீலனின் வலது பின்னங்காலில் பட்டு நெருப்போடு சாய்ந்தான்.
கபிலரின் வருகை
”என்ன புலவரே இவ்வளவு பெரிய போர்வையைப் போர்த்திக் கொண்டு
வந்திருக்கிறீர் உடல் நடுங்குகிறதா” எனக் கேட்டான் சோழவேழன். ”தோழனின் நடுக்கத்தை
பெரும்புலவர் தானும் உணர்கிறாரோ” எனக் கேட்டான் உதயஞ்சேரல்.பெரும் புலவர் நம்மைப் பார்க்க
வரவில்லை நீலனைப் பார்க்கவே வந்துள்ளார்.நீலனைப் பார்த்து விட்டு வரட்டும் பிறகு பேசலாம்
என்றார் குலசேகரபாண்டியன்.படையணிகளுக்குள்ளும்,பாசறைகளுக்குள்ளும் வளைந்து சென்று
மூஞ்சலை அடைந்த கபிலர்,நீலனைப் பார்க்கும் வரை வாய் திறக்கக் கூடாது என்ற உறுதியுடன்
இருந்தார்.எதிரியின் கூடாரத்தில் மரத்தூணில் சாய்ந்து கிடந்த நீலனைக் கண்டதும் அவனது தலையை
மெல்லத் தடவிக் கொடுத்தார்.நீலன் முயன்று இமை திறந்து பார்த்தான் எதிரில் கபிலர்.நீலன் மெல்ல
மெல்லப் பேசத் தொடங்கினான்.கபிலரைப் பார்த்து “உங்களைச் சந்தித்த முதல் நாள் நான் என்ன
சொன்னேன் என்பது நினைவிருக்கிறதா” என்று கேட்டான்.கண்களை அகலத் திறந்து கேட்ட
கபிலரிடம் “நான் என் வார்த்தையைக் காப்பாற்றிவிட்டேன்.நான் மரணம் அடைவதற்குள் மயிலா
வீரமகவை ஈன்றெடுப்பாள்” என்று கூறினான்.கொற்றனைக் காக்கத் தவறியதற்காக காலம்பனிடன்
மன்னிப்புக் கேட்டதாகச் சொல்லுங்கள் என்றான்.தான் போர்த்தியிருந்த போர்வையை நீலனுக்குக்
போர்த்திவிட்டு,அவனது மேலாடையைக் கிழித்து குருதியாட்டு விழாவிற்காக கபிலர் எடுத்துச்
சென்றார்.
பாரியின் சபதம்
பன்னிரண்டு நாட்களில் எதிரிகளை வென்று உன்னை மீட்பேன். என்று பாரி
சொன்னதை நினைவு கூர்ந்து நீலன் அசைபோட்டுக் கொண்டிருதான். கபிலர் நீலனுக்குப் போர்த்திய
போர்வை முறியன் ஆசான் கொடுத்தனுப்பிய மருத்துவ ஆடை.பருத்தி நூல்களோடு சேர்த்து மூலிகை
நார்களால் பின்னப்பட்டது. குருதிக் கசிவுகள் உடனே நிற்கும்.உணவில் நஞ்சு கலந்து
கொடுத்தாலும்.அது நஞ்சு முறியாகவும் செயல்படும்.அந்தப் போர்வையின் விளிம்பில் தராக்கொடியும்
செவ்வகத்தி வேரும் இருந்தது.இரும்புக் கொடியில் அவன் கட்டப்பட்டிருந்தால் அந்தக் கொடியின் பால்
பட்டு இரும்பு உருகும்.தட்டியங்காட்டுப் போரில் பாரியின் வரவிற்கு மூவேந்தர் படை துடித்துக்
கொண்டிருந்தது.குளவன் திட்டிலிருந்து தட்டியங்காட்டுப் பரப்பு முழுவதையும் பாரி பார்த்துக்
கொண்டிருந்தான். \
நீலனை மீட்பதே முதற்பெரும் வேலை.நீலனின் இடது காலின் காயம் மிக
வலிமையானதாக இருந்ததால் பாரியின் இடது தோளில் சாய்ந்தபடி இருந்தான் நீலன்
குருதியாட்டுவிழா
முழுநிலவு நாள்.போர்த்தெய்வமான கொற்றவை தனது
பசியாறியிருப்பாள்.கொற்றவையின் மகிழ்வை பறம்பு நாட்டின் மகிழ்வாக மாற்றுவதே
குருதியாட்டுவிழா.வெறிகொள் மாந்தர் சினந்தாடும் வெற்றிக்கூத்து. நிலவின் மஞ்சள் ஒளியில் காடே
ஒளிர்ந்துகொண்டிருந்தது.கூத்துக்களம் நோக்கித் தன் பிஞ்சு மகவைத் தூக்கிக் கொண்டு வந்தாள்
மயிலா.காயங்கள் இன்னும் முழுமையாக ஆறாமல் நீலன் விரிபலகையில்
அமர்ந்திருந்தான்.கபிலரும்,முடியனும், உதிரனும்,விண்டனும்,காலம்பனும் அவ்விடத்தில் இருந்தனர்.
கபிலரை அழைத்து வந்து நீலனின் அருகில் அமர வைத்தான் பாரி.பாணர்
கூட்டத்தின் பெயர் சொல்லி நீலன் அழைத்தான்.நீலனின் குரல் கேட்ட கூத்துக்களம் நீலனின்
குரலுக்காகக் காத்திருக்க,மயிலா குழந்தையுடன் எட்டிப் பார்த்தாள்.கபிலர் ஆர்வமாக இருந்தார் பறம்பு
மக்கள் முன் நீலன் சொன்னான்.
”பனையன் மகனே பாடுங்கள்” பறம்பே எழுந்து ஆடத்தொடங்கியது.கபிலருக்கு நீலன் வேட்டுவன்
பாறையில் முதல் நாள் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன
பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஒம்பும் பாரி வேளே
சு.சோலைராஜா
தூயதமிழ்ப் பற்றாளர் விருதாளர்
இராமநாதபுரம் மாவட்டம்
நன்று
இதனை மேலும் செம்மைப்படுத்த வேண்டும்
இதழ்கள் ஆறு