மண்ணால் கட்டப்பட்டு மண்வாசனை மிகுந்து மனிதநேயத்தோடும் மறவா நினைவுகளும் தந்த வீடு,
ஓலையினால் அலங்கரிக்கப்பட்டு ஒய்யாரமாய் அமைந்து ஓராயிரம் கைகள் கதவின் மேல் தட்டிய வீடு,
உடைந்த உறவையும் இணைத்து
உடன் பிறந்த பிறப்புகளையும் நேசித்த வீடு,
தெரு விழாக்களில் சண்டையிட்டாலும் திருவிழா என்றாலே ஒன்றாய் கூடி மகிழ்ந்த வீடு,
இன்பமும் துன்பமும் வந்தாலும்
இமைப்போல் என்னை காத்த வீடு,
மின்சாரம் இல்லாத வீடு மின்மினி பூச்சிகள் ஒளி தந்த வீடு,
குழந்தையாய் தவழ்ந்து குயிலின் இசை கேட்டு வளர்ந்து
குமரியாய் மலர்ந்து மணப்பெண்ணாய் மாறி மறு ஜென்மம் கொடுத்த வீடு,
அம்மியில் அரைத்த மசாலாவும் அம்மாவின் கை வண்ணமும் விறகடுப்பு சாப்பாடும் சிறகு முளைத்த கோழி குஞ்சும் வாழ்ந்த வீடு,
சுகாதாரமாய் மலர்ந்த வீடு சுதந்திரம் எனக்கு கொடுத்த வீடு சிலந்தி வளை போல் கட்டிய வீடு சிதறாமல் காப்பது எமது கடமை இதுவே என் வீடு.
நன்றி
இப்படிக்கு
சி பார்வதி மணி
புரையூர்
தூத்துக்குடி மாவட்டம்
Super
Old is gold very excellent story
என்னுடைய நாடு என்னை நல்ல பார்த்து கொள்ளவில்லை ஏன் என்றால் நாட்டினுடைய அழகை கூற வார்த்தை இல்லை