இலுப்பை பூக்கள் நிறைந்த காடு என்ற பெயரிலுள்ள ஈஜிபுரா என்ற இடத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஏக்கர் நிலத்தில் உள்ள 150 ஆண்டு பழமை வாய்ந்த கோதண்டராம சுவாமி கோவில். கோயிலின் வரலாறு இதோ உங்களுக்காக
ஆந்திர பூர்வீகம் பெனுகோண்டாவின் ராஜ்ய சமஸ்தானத்தை சார்ந்தவர்கள் தான் இந்த கோயிலின் பூர்வகுடிகள்
டாக்டர் சந்தானம் இந்த பூர்வீகத்தின் ஐந்தாம் தலைமுறை வாரிசு
அவருடைய கனவுதான் இன்றைய சிலையாக உருவெடுத்து இதோ மகா கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது
உலகின் அனைத்து கடவுள்களையும் ஒன்றிணைத்து ஒரு ஏக சிலா ரூபம் வடிக்க விரும்பி, தமிழகத்தின் திருவண்ணாமலை வந்தவாசி தாலுகாவில் உள்ள சூரக்கோட்டையில் 650 டன் எடை கொண்ட பாறையை தேர்வு செய்து விஸ்வரூப மஹா விஷ்ணுவின் உருவம் செய்யப்பட்டு அங்கிருந்து மும்பையிலிருந்து வரவழைக்கப்ப்ட்ட 240 சக்கரங்கள் கொண்ட வாகனத்தில் புறப்பட்டது
பயணப்பட்ட பாதையெங்கும்
பல்வேறு சிக்கல்கள்
பல மாற்று பாதைகள்
மாற்று டயர்கள்
டெல்லியிலிருந்து வரவழைக்கப்ப்ட்ட மாற்று வாகனங்கள் என்று பல மாத பயணத்துக்கு பின் 2019 ஆம் ஆண்டு நவம்பரில் பெங்களூர் ஈஜிபுரா கோதண்டராம சுவாமி கோயிலுக்கு வந்து சேர்ந்தது
சோதனைகள் இன்னும் முடியவில்லை. வழியெங்கும் பிரச்சனையையும் அதற்கான தீர்வுகளையும் கண்டு கடந்து வந்த சிலை கோயிலுக்கு உள்ளே நுழைவதிலும் சிக்கல் இருந்ததால் கோவிலின் மதில் சுவரும் இடிக்கப்பட்டு உள்ளே கொண்டு வந்து படுக்கைவாக்கில் வைக்கப்பட்டது
2019 சீனாவில் துவங்கி உலகையே ஸ்தம்பிக்க வைத்த கொரோனா தொற்று காலத்தில் சிலை நிறுவவதில் இன்னும் சிரமங்களை எதிர்கொண்டு
பல்வேறு அறிஞர்களின் ஆலோசனைகளை கொண்டு 2022 ராட்சத கிரேட் உதவியுடன் நிறுத்தப்ப்ட்டது
கிட்டத்தட்ட கடந்த மூன்று வருடங்களாக நடந்து வந்த பணிகள் நிறைவுக்கு வந்து 108 அடி உயரம் மற்றும் கிட்டத்தட்ட 28 அடி அகலம் கொண்ட பதினோரு முகங்கள் கொண்ட ஶ்ரீ விராட விஸ்வரூப மஹா விஷ்ணு சிலை நிறுவப்பட்டது.
மத்தியில் உள்ள விஷ்ணு முகத்தின் இடது பக்கம் சிவனின் சிவனின் அவதாரங்களும், பரமேஸ்வர், சண்முகர், விநாயகர், நரசிம்மர், ரிஷி முனிவர்,
மற்றும் வலது பக்கம் விஷாணுவின் அவதாரங்களும், பிரம்மா, ஆஞ்சநேயர்,அக்னி, கருடன், ரிஷி முனிவர் ஆகியோருடன் ஒரு பன்முகங்களும் ஒன்றிணைந்த ஒரு உலக கடவுளாக Universal God ஆக எழுந்தருளியிருக்கிறார்
சிலகேசவ ரூபம் என்றழைக்கப்படும் இந்த காட்சி, உத்தவ கீதையில் வரும் விஷ்ணுவை நம் கண் முன் கொண்டு வருகிறது
கிரீடத்தில் சூரியன் சந்திரன்
கழுத்தில் நீலகண்ட ருத்ராக் ஷ மணிகள், சப்த ரிஷிகள் ஹாரத்தில் காட்சி தருகிறார்கள்
நெற்றியின் நடுவே ஞான நேத்ரம்
புஜங்களில் நாரதர் மகரிஷி
பதினாறு கைகளுடன் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் விதமாக காட்சி அளிக்கிறார்
இவருக்கு தினமும் அபிஷேகம் செய்யும் வண்ணம்
சிலையின் கீழ்பகுதியில் சிலை போன்ற சிறிய அளவிலான பஞ்ச லோகங்களால் ஆன விஷ்ணுவின் போக மூர்த்தி சிலை வைக்கப்பட்டு தினமும் இவருக்கே அபிஷேகம் செய்யப்படும்
கோவில் நுழை வாயிலிலேயே இவரை தரிசித்தவாறே, ராஜகோபுரத்தை கடந்து உள்ளே செல்ல வேண்டும். இடது புறத்தில் சிவன், விநாயகர், வள்ளி – தெய்வானையுடன் முருகர் என சிவ குடும்பத்தில் உள்ள மூவருக்கும் தனித்தனியாக சன்னிதிகளை தரிசிக்கலாம். இதிலிருந்து, ஹரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்ந்து கொள்ளலாம். இங்கு சைவம், வைணவம் என்ற பிரிவினைக்கு இடம் கிடையாது.
அப்படியே வலப்புறம் திரும்பினால், ஆஞ்சநேயர், நவக்கிரகம், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனி தனி சன்னிதிகள் உள்ளன. இவர்களை தரிசித்தவாறு சற்று முன்னே சென்றால், பூவராகன், அஷ்டலட்சுமிக்கு தனியாக சன்னிதிகளை பார்க்கலாம்.
மேலும், தெப்ப குளத்தில் காளிங்க நர்த்தனத்தில் கிருஷ்ணர், நவநீத கிருஷ்ணரும் காட்சி அளிக்கிறார்.
கர்நாடகாவில் சென்னப்பட்டணாவை தவிர்த்து, இந்த ஆலயத்தில் மட்டும் தான் நவநீத கிருஷ்ணர் விக்ரஹம் உள்ளது. அப்படியே கோவிலின் பிரகாரத்தில், 20 துாண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும், தனித்தனியே பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
கோவிலின் மூலவராக சாளக்கிராமத்தில் கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணன்; உற்சவர் ஆதிசேஷர், சக்கரத்தாழ்வார், ராமானுஜர், ஆஞ்சநேயர் விக்ரஹங்கள் உள்ளன.
இந்த கோவிலில் மூலவர் கோதண்டராமரிடம் வேண்டிய வரங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கும். இவரை பார்க்க வருவோர், பலரும் கடிதங்களில் தங்கள் வேண்டுதல்களை எழுதி விட்டு செல்கின்றனர்.
இவை அனைத்தும், அவர்கள் வேண்டிய சில நாட்களிலே நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்கு துலாபாரம் செலுத்தும் வசதி உள்ளது. அன்னதானம் வழங்கியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள மண்டபம், 35 ஆண்டுகள் பழமையானது. இதில் குழந்தைகளுக்கான கற்றல்கள், ஏழைகளின் திருமணம் நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, மார்கழி மாதம் 30 நாட்களும் திருப்பாவை பாராயணம் செய்யப்படும். வளர்பிறை பிரதோஷம் ஆகியவை விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ராமநவமி அன்று திருத்தேர் பவனி வரும்.
மஹா கும்பாபிேஷகம்
பரவசத்துடன் துவக்கம்
பெருமை வாய்ந்த கும்பாபிேஷகம், ஜூன் 1 ம் தேதி காலை 6:30 மணி முதல் பகவத் வாசுதேவ புண்யாவச்சனம், மஹா கும்பம் நிறுவப்பட்டு வழிபடுதல், சிலைக்கு பஞ்சகவ்ய ஆராதனை, பஞ்சகவ்ய ஸ்நாபனம், சிலைக்கு தானியங்களை காணிக்கையாக வழங்குதல், யாகம் துவங்குதல், மூல மந்திரம், மூர்த்தி, குடும்ப, பரிகார ஹோமங்கள், சிலைக்கு மலர் சமர்ப்பித்தல், மஹா நெய்வேத்தியம், பிரசாத விநியோகம்;
மாலை 5:30 மணி முதல் விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம், மஹாரும்பாராதனை, பிண்டிரா பூஜை செய்து சிலை நிறுவுதல், கோபுர கலசம் நிறுவுதல். மூலமந்திர, அத்தன்யாச, பஞ்ச சூக்த, ஹரிவர் ஹோமங்கள், மஹா மங்களாரத்திக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம்;
ஜூன் 2 ம் தேதி காலை 6:00 மணி முதல் சுப்ரபாதம், பகவத் வாசுதேவ புண்யாவச்சனம், கொடி, கும்பம் வழிபாடு, மஹா கும்பாராதனை, மூல மந்திரம், விக்ரக, பிராண பிரதிஷ்டை, பரிவார, பிராயசித்த ஹோமங்கள், மஹா பூர்ணாஹீதி, மஹா கும்பாபிஷேகம். பஞ்சகவ்யா, கோபஷ்ட தரிசனங்கள், மஹா நைவேத்தியம், மஹா மங்களாரத்தி நடக்கிறது.
கும்பாபிேஷகத்திற்கு முன்னதாக 336 சுமங்கலிகள், சாளக்கிராம ஹாரமாலை, ருத்ராக் ஷ மாலை, திருமண் காப்பு, பரிவார மூர்த்தங்களின் பதக்கங்கள் அனைத்தும் ஊர்வலமாக நான்கு மாட வீதிகளிலும் எடுத்து வரப்பட்டு, பெருமாளுக்கு அலங்கரிப்பதற்காக சாற்றப்படும்.
பகல் 12:30 மணியிலிருந்து 12.45 மணிக்குள் புனிதநீர் ஊற்றப்படுகிறது. இதில், முக்கிய சிறப்பு என்னவென்றால், இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. 108 அடி உயர சிலை பிரதிஷ்டை செய்யப்படும் அன்று, கும்பாபிஷேகமும் பக்தி பரவசத்துடன் நடக்கிறது. மேலுகோட்டே பேராசிரியர் செல்வப்பிள்ளை ஆச்சாரியார் தலைமையில் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் கோவில் வளாகத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஐந்து யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த யாக குண்ட பூஜையில் 30 ஆச்சாரியார்கள் பங்கேற்பர். வரும் 6ம் தேதி ராமர் – சீதா திருக்கல்யாணம் நடக்கிறது. எனவே, பக்தர்கள் அனைவரும் திரளாக வருகை தரும்படி ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்து உள்ளனர். கோவில் பூஜைகள் தொடர்பாக ஸ்ரீகாந்த் – 98840 73394; ஸ்ரீகுமார் – 99401 32369 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மண்டல பூஜை
கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கும். இந்த பூஜை, ஜூன் 3 ம் தேதி துவங்குகிறது. தினமும் காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை போக மூர்த்தி சிலைக்கு அர்ச்சனைகள் நடக்கும். ஜூலை 20 ம் தேதி மண்டல பூஜை சிறப்புடன் நடக்கும்.
இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ளலாம். மண்டல பூஜையின் கடைசி நாள் விசேஷ பூஜைகள் நடக்கும். உபயதாரர்கள் கவுரவிக்கப்படுவர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்
ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள் குடும்பத்துடன் காலை மாலை வேளைகளில் கலந்து கொண்டு இந்த மொத்த நிகழ்ச்சிகளை காணும் வாய்ப்பினையும் இறைவனின் அருளையும் வணங்கி பெற்றார்கள்
