‘மைசூர் பாக்’ இனிப்பின் பெயரில் .
பாக் என்று இருக்கிறதாம் . .அது பாகிஸ்தானை நினைவு படுத்துகிறதாம் . எனவே , .ஆபரேஷன் சிந்தூர் ரை .நினைவுபடுத்தும் விதமாக மைசூர் பாக் இனி ‘மைசூர் ஸ்ரீ’ என்று அழைக்கப்படும் என்று . ஒரு வட இந்திய இனிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது .
இந்த பைத்தியக்காரத்தனத்தை
எங்கே போய் சொல்லி அழுவது . ?
மைசூர் பாகு என்ற இனிப்பு
பல்லவ காஞ்சியை சேர்ந்தது . . .
அந்த இனிப்பின் பழைய பெயர்
மண சீர் பாகு !
பாகு என்பது தூய தமிழ் சொல் . பாகுவை தான பாக் என்று வியாபாரத்திற்காக சொல்கிறார்கள் . உண்மையில்,
கன்னடத்தில் பாகு என்ற சொல் இல்லை .
எந்த பொருளும்
திடீர் என்று தோன்றுவதில்லை . எதற்கும் ஒரு மூலம் இருக்கும் .
வெல்லப்பாகு ,அல்லது கற்கண்டு துகள் பாகு காய்ச்சி , மாவு கலந்து, மண சீர் பாகை கோபுர வடிவில் தயார் செய்து , சீர் பாடல்களை பாடி , காஞ்சி வரதன் மற்றும் பெருந்தேவி தாயார் திருமணத்தன்று சீராக வைப்பார்கள் .
சென்னை போரூர் அருகே உள்ள மணப்பாக்கத்தை சேர்ந்த கிராமத்து மக்கள் . .தங்களை பெருந்தேவி தாயாரின் பிறந்த வீடாக கருதினார்கள் . எனவே , பெருந்தேவி தாயாரின் திருமணத்திற்கு சீர் கொண்டு செல்லும்போது, மண சீர் பாகு என்று சீர் தயார் செய்து எடுத்து செல்வார்கள் . மண சீர் பாகு தயாரித்தவர் மணற்பாக்கத்து நம்பி என்று அழைக்கப்பட்டார் .
காஞ்சியில் இருந்து .ஸ்ரீரங்கம் சென்ற வைணவர்கள் மண சீர் பாகை ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள்-ரங்கநாயகி தாயார் திருமணத்தில் அறிமுகம் செய்ய , பிறகு அங்கிருந்து மேல்கோட்டை சென்ற சிலர் , . மண சீர் பாகை மேல்கோட்டையில் அறிமுகம் செய்தனர் .
1905 ல் மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ வாதேயார் சமையல்காரர் , காக்காசூர மாடப்பா , மேல்கோட்டை சென்ற போது அங்கே ,மண சீர் பாகை ருசித்து அதனால கவரப்பட்டு , அம்பா விலாஸ அரண்மனையில் ல் மன்னருக்கு மண சீர் பாகை தயாரித்து கொடுத்தார் .
மன்னர் கிருஷ்ண ராஜ வாதேயார். அதன் சுவையில் மயங்கி போய் அதன் , பெயர் என்ன என்று கேட்டார் .
காக்காசூர மாடப்பா .மண சீர் பாகு என்று சொல்ல தெரியாமல் விழிக்க , மைசூர் மன்னர் அதற்கு மைசூர் பாகு என்று பெயர் வைத்தார் .
பாகு என்பது தூய தமிழ் சொல் . கன்னடத்தில் பாகு என்ற சொல் கிடையாது . தமிழ் நாட்டில் இருந்து சென்ற இனிப்பு . வைணவ திருமணங்களில், இப்போதும் , மண சீர் பாகு முக்கியமான இனிப்பு .
பாகிஸ்தான் என்கிற பாக்-கிற்கும் பாகு என்கிற தமிழ் சொல்லுக்கும் . எந்த தொடர்பும் இல்லை . அந்த இனிப்பு நிறுவனத்திற்கு இந்த வரலாறுகள் தெரிய நியாயமில்லை .
.
இப்படி பெயர்களை மாற்றி கொண்டே இருப்பதால் தான் , நமது தமிழ்நாட்டு தின்பண்டங்கள் எல்லாம் காணாமல் போகின்றன .
நாம் இனி மைசூர் பாகை தூய தமிழில் மண சீர் பாகு என்றே அழைப்போம் . அதுதான் அந்தத் இனிப்பின் ஒரிஜினல் பெயர்

