பறம்பின் வாட்படையில் உள்ள அனைவரும் மெய்க்கவசம் அணிந்திருந்ததால், முன்னேறிச் சென்று தாக்கிய சாகலைவனால் எதிரிகளை வீழ்த்தி முன்னேற முடியவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகுதான் அவன் உணர்ந்தான்.
——- வேள்பாரி ——-
போர்கள் மூலமே சிற்றரசுகளிலிருந்து பேரரசுகள் உருவாயின. கவச உடையே போர்வீரனின் காவல் ஆகிறது. வேள்பாரியில் கூறப்படும் கவசஉடை இயற்கை மூலபொருள்களால் உருவானது.
கிராமங்களில் கயிற்று கட்டிலுக்கு தென்னங்கயிற்றைவிட பலமடங்கு வலிமையான புளுச்சங் கயிற்றை பயன்படுத்துவார்கள்.
இன்றும் நுட வைத்திய முறைகளில் நாட்டு வைத்தியர்கள் மரகூழ்,உளுந்துமாவு,முட்டைவெண்கரு இவற்றால் கட்டு போடுவார்கள்.கத்தியால் அறுத்தெடுப்பது மிகவும் சிரமம்.
புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் அனைத்துவிதமான போர் ஆயுதங்களுடன் முழுவதும் கம்பி வலை உடையணிந்த போர்வீரன் சிலை ஒன்று உண்டு ” பாகுபலி ” போல.
இன்றைய அணு ஆயதங்களினால்
போர் நிகழ்ந்தால் உயிரினங்கள் மிஞ்சுமா என்பதே கேள்வி குறி.
இன்னும் பேசுவோம்
