#கல்லானாலும்_கணவன்
#புல்லானாலும்_புருஷன்,
#கணவனே_கண்கண்ட_தெய்வம், #மனைவி_சொல்_மந்திரம்_இல்லை,
இந்த மாதிரி வாழ்ந்த காலத்தில்
விவகாரத்தும் அதிகம் கிடையாது சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் நமது
முன்னோர்கள்..
நமது முன்னோர்கள் தன் மனைவியை என்னம்மா என்ற சொல்லுக்கு மறுசொல் சொல்ல மாட்டார்கள். அதேபோல மனைவிமார்களும் தன் கணவனை என்னங்க அப்படி என்று தான் சொல்வார்கள்.. அதற்காக அவர்கள் அடிமை #வாழ்க்கை எல்லாம் வாழ வில்லை ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டும் விட்டுக் கொடுத்தும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்..
ஆனால் இன்றைய தலைமுறையினர் கணவனை “வாடா “போடா என்றும் மனைவியை “வாடி “போடி என்றும்
கணவனை பெயர் சொல்லி “செல்லமாக” கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்..
கணவன் மனைவி இரண்டு பேருக்கும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வாழ்கின்றனர்.. நான் எங்கே போனாலும் நீ கேட்க கூடாது நீ எங்க போனாலும் நான் கேட்க மாட்டேன் என்று
வாழ்கிறார்கள் அப்படி இருந்தும் இருவருக்கும் சண்டை சச்சரவு வந்து விவாகரத்து கேட்டு கணவன் மனைவியும் தனித்தனியாக வாழ்கிறார்கள்…
இன்றைய தலைமுறைக்கு யாருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லை நீ பெருசா நான் பெருசா என்ற ஒரு பாகுபாடோடு….தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்….
இவர்களால் பாதிக்கப்படுவது யார் என்று கேட்டால் அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் தான்.
