எது சுதந்திரம் என்று
யோசியுங்கள்!
நம் நாட்டிற்கு சுதந்திரம்
கிடைத்தது…..
ஆனால்,
இந்நாள் வரையிலும்
தனி மனித சுதந்திரம்
என்பது இல்லை….
ஏதோ ஒரு வகையில்
சிந்தித்தாலே….
அதுவும் கூட
நம்மை அடிமைப்படுத்திவிடுகிறது….
எது சுதந்திரம்?
அலைபேசிக்கு அடிமை….
காதலுக்கு அடிமை….
வேலை பார்க்கும் இடத்தில் கூட அடிமை…..
ஓட்டுப் போடும் நேரம்
பணத்துக்கு அடிமை….
இதுவா சுதந்திரம்…..
ஒரு பெண் தனியே போகும் வழியில்
தீங்கு நேராமல் இருப்பதல்லவோ
உண்மையான சுதந்திரம்…..
நன்றி
இப்படிக்கு,
சி.ஜீவநந்தினி
கோ.வெங்கடசுவாமி கல்லூரி,
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம்.