| ஆண்டு / தேதி | நிகழ்வு | முக்கியத்துவம் |
|---|---|---|
| 30.11.1790 | திருப்பத்தூர் மாவட்ட உருவாக்கம் | பிரிட்டிஷ் ஆட்சியில் முதல் மாவட்ட அமைப்பு |
| 1790–1792 | முதல் ஆட்சித் தலைவர் – Kindersley | நிர்வாக அடித்தளம் அமைப்பு |
| 04.04.1792–07.07.1799 | கர்னல் Alexander Read ஆட்சியில் | ரயத்துவாரி முறை களப்பணி தொடக்கம் |
| 15.11.1796 | ரயத்துவாரி வரி முறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜமீன்தாரி அல்ல – Direct collection system, later Indian revenue base |
| 1903 | பாலாறு பெருவெள்ளம் – வாணியம்பாடி அழிவு | அந்நிய நாளிதழ்களில் Salem District-கீழ் குறிப்பிடப்பட்டது |
| 1989 | வட ஆற்காடு → அம்பேத்கர் மாவட்டமாக பிரிப்பு | திருப்பத்தூர் பகுதி வேலூருடன் இணைப்பு |
| 2019 (recent) | திருப்பத்தூர் மீண்டும் தனி மாவட்டம் | 230 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று வட்டம் முழுமை |
வரலாற்றில் இன்று.
முதன்முதலாக திருப்பத்தூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட நாள் 30.11.1790.
பிரிட்டிஷாரால் திருப்பத்தூர் மாவட்டம் 30.11.1790 அன்று உருவாக்கப்பட்டு அதன் முதல் ஆட்சித் தலைவராக கிண்டர்ஸ்லே நியமிக்கப்பட்டார்.
அவர் 3.4.1792 வரை அப்பொறுப்பில் இருந்தார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டதும் திருப்பத்தூரில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர் காலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருந்த கட்டிடம் தற்போது திருப்பத்தூர் இரயில்வே நிலையமாக செயல்பாட்டில் உள்ளது.
அதன் பின்னர் ஒருங்கிணைந்த
சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் தலைநகராக திருப்பத்தூர் இருந்தது.
கர்னல் அலெக்ஸாண்டர் ரீட்
4.4.1792 முதல் 7.7.1799 வரை மாவட்ட ஆட்சியராக இருந்தார்.
இங்கு தான் தமிழக ஆட்சி முறையின் முக்கிய துவக்கம் ஆரம்பித்தது.
நாட்டின் பிற பகுதிகளில் உழுபவர்களிடம் வரிவசூல் செய்யும் அதிகாரம் ஜமீன்தார்களுக்கு வழங்கப்ட்டது.இதற்கு ஜமீன்தாரி முறை என்று பெயர்.
ஆனால் உழுபவர்களிடம் நேரடியாக வரி வசூல் செய்யும் ரயத்துவாரி முறை இங்கு தான் முதன்முதலில் மாவட்ட ஆட்சியர் கர்னல் ரீட்,
சார் ஆட்சியர்கள் தாமஸ் மன்றோ, கேப்டன் வில்லியம் மெக்லியாட் மற்றும் கேப்டன் கிரஹாம் ஆகியோரால் களப்பணியும் விரிவான சர்வேயும் செய்து அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ரயத்துவாரி முறை மாவட்ட ஆட்சியர் கர்னல் ரீடால் 15.11.1796 அன்று “திருப்பத்தூர் மாவட்ட குடிகள், வணிகர்கள் மற்றும் பிற குடியானவர்கள் பெயரால் வெளியிடப்படும் பிரகடனம் அல்லது கெளல்நாமா ” என்ற பெயரில் ரயத்துவாரி முறையின் வரிவசூல் முறை பிரகடனமாக வெளியிடப்பட்டது.
பின்னர் கால ஓட்டத்தில் சேலம் மாவட்டம், சித்தூர் மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம்,வேலூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க நேர்ந்த திருப்பத்தூர் மீண்டும் ஒரு புதிய மாவட்டமாக தற்போது உருவாகியுள்ளது.
1903 ஆம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வாணியம்பாடி நகரம் அடித்துச் செல்லப்பட்டு சுமார் 200 பேர் பலியான சம்பவம் பற்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாளிதழில்களில் வெளியான செய்தியில் கூட சேலம் மாவட்டம் வாணியம்பாடி என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி ஒரு காலத்தில் திருப்பத்தூர் மாவட்டம், சேலம், வட ஆற்காடு, வேலூர், சித்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாவதற்கு முன்பே மாவட்டமாக இருந்து,ஒருபோது சேலம் மாவட்டத்தின் தலைநகரமாகவும் இருந்துள்ளது.
காலப்போக்கில் சேலம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு வட ஆற்காடு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு பின்பு
1989 ல் வட ஆற்காடு மாவட்டம் அம்பேத்கர் மாவட்டமாக பிரிக்கப்பட்டு 1996 ல் பெயர் மாற்றப்பட்ட வேலூர் மாவட்டத்துடன் இருந்து, இப்போது திருப்பத்தூர் மாவட்டம் துவக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் உருவாவதற்கு 230 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பத்தூர் மாவட்டம் உருவாகி இருந்தது என்பது வரலாறு.

இது குறித்து வரலாற்று தரவுகளோ ஆதாரங்களோ உங்களிடம் இருந்தால் பகிருங்கள்
தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளவோ
உண்மைகளை இன்னும் உரக்கச் சொல்லவோ அது நிச்சயமாக நமக்கு உதவும் நன்றி அக்னி தமிழ்
