குடும்பம் என்ற கோவிலில் குத்து விளக்காய் தாயும்,
தீபமாய் தந்தையும் குடுபத்திற்கு வெளிச்சம் கொடுப்பவர்கள்
உழைப்பின் வியர்வையில் விளந்த முத்து
கவலையை மறைத்து கொண்டு புண் சிரிப்பில் அன்பை வெளிப்படுத்துபவர்
தனக்கென்று எதுவுமில்லாமல் தன் குடும்ப தேவையை நிறைவேற்றுபவர்
தாயிற்கு துணையாய் பிள்ளைகளுக்கு உறுதுணையாய்
குடும்பத்திற்கு அச்சாணியாய் ஒளியேற்றுபவர்
நேரம் காலம் பார்க்காமல் ஓடி ஓடி உழைத்து ஓடாய் தேய்ந்தாலும் அன்பிற்கு குறைவில்லை
காயங்கள் ஆயிரம் பட்டாலும் வலிகள் பல இருந்தாலும் துன்பத்தை மறந்து இன்பத்தை கொடுப்பவர்
சுமைகளையும் சுமைகளாய் பார்க்காமல் சுமைந்தாங்கியாய் என்னை சுமப்பவர்
தூக்கத்திலே இருந்தாலும் துளியேனும் உணவை துளி துளியாய் ஊட்டியாவது வயிறு நிறைய செய்பவர்
ஆலமரமான குடும்பத்தில் ஆணி வேறாய் இருந்து
ஆழமான அன்பை
ஆசை தீர அளிக்கும் என் தந்தையே நீர் பல்லாண்டு வாழ்க
கவிஞர்.இரா. ஜோமினா பாலமுருகன்
சென்னை
