கந்தன் தந்தைக்கு உபதேசித்தது விந்தை
என் தந்தையின் வாக்குகளே உபதேசம்
பிள்ளையின் மகிழ்ச்சிக் கடலில் கஷ்டங்களைக் கரைப்பவர் தந்தை
மகளின் பிறப்பு தாயின் பிரசவ வேதனை
மகளின் திருமணம் தந்தையின் பிரசவ வேதனை
அவையத்து முந்தியிருப்பச் செய்ததால் என் மனத்துள் வாழ்கிறார் தந்தை
உலகத்தார் உள்ளத்திளெல்லாம் யாமிருக்க கிரியா ஊக்கியாய் வாழ்கிறார் தந்தை
உயிர் அணுவாய் கரு உருவாக்கினாலும் எருபோட்டு வளர்ப்பவர் தந்தை
பதிலி இல்லாத உறவு தந்தை
கட்டணமில்லா கல்வி தந்தையின் அறிவுரை
ஒரு சொல்லில் கவிதை அம்மா எனில் ஒரு சொல்லில் சரித்திரம் தந்தை
தனக்கென்று சமைக்காத தாயினும் சாலப் பரிந்து இருப்பவர் தனக்கென்று சம்பாதிக்காத
தந்தை
தான் கோமாளி வேடம் போட்டு மகனை கதாநாயகன் ஆக்குபவர் தந்தை
ஆசிரியர் சிற்பி
மதிப்புறு முனைவர்
நீ. சங்கர் ,
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
ஜாகிர் வெங்கடாபுரம், கிருஷ்ணகிரி .
