அப்பா வெறும் வெற்று வார்த்தையல்ல
ஆண்டவன் உருவில் எனக்கு கிடைத்த வரம்
இறைவன் எனக்காக பூமியில் அவதரித்தார்
ஈரைந்து மாதங்கள் சுமந்த அம்மாவை மிஞ்சியவர்
உலகம் போற்றும் வகையில் வளர்த்தவர்
எப்போதும் என் நன்மைக்காக பாடுபடுபவர்
ஏற்றம் தரும் வாழ்விற்கு ஏணியாகியவர்
ஐவிரல் நடுவே என்கைவிரல் கோர்த்து
ஒளிச்சடராய் ஒவ்வொரு அடியிலும் ஆசிர்வதித்து
ஓயாது கண்னுறங்காது குடும்பம் காத்து
ஔடதம் நீக்கி ஆயுள் கூட்டிட்ட
உன்னத தெய்வமே போற்றி போற்றி!
ஆசிரியர் கவிஞர் பா.தேவிகாM.,A.,B.,E.,D
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சங்கமங்கலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டம்
