ஓ…குடும்பத் தலைவனே !
உழைப்பதில் நிலைக் கொண்டாய்
உனக்கென்று எதைக் கண்டாய்
மனைவிக்குப் பிடிக்குமென ஓடுகிறாய்
பிள்ளைக்குத் தேவையெனத் தேடுகிறாய்
இல்லத்திற்கு வேண்டுமெனப் பறக்கிறாய்
பெரியோரைக் காத்திட துடிக்கிறாய்
எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்கிறாய்
உன் மனசுக்குப் பிடிச்சதை மட்டும் ஏனோ
தெரிந்தே நீயும் மறக்கிறாய் !
ஒரு தலைவனின் இலக்கணம் யாதென
பூமிக்கு நீயும் புகட்டுகிறாய்
உன் பாதம் தொட்டு வாழ்தலின்றி
குடும்ப உறவுக்கு ஏது
நன்றிக் கடன் ?
அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்
பாசத்துடன் ஆசிரியர் கோ. தெய்வநாயகம்
