ஐயா வணக்கம்.
சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு,
வான் மழை போல் தாங்கள் பொழிய, மழையிலும் நனையாத ஓவியமாய் வையகத்தில் தங்களின் மறுவடிவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சியாமளாவின் சார்பாக தங்களுக்கு ஒரு கடிதம்.
மாதேஸ்வரன் பெற்றெடுத்த தங்கமகள்.
வசந்தியின் வாசமான உறவு.
தாங்கள் கரம் பிடித்து வழிகாட்டியதால் தூரிகை பிடித்து உச்சம் தொடும் மகள்.
தாய் தந்தை கொடுத்த வேகத்தினால் முடுக்கம் அடைந்து அதிவேகத்துடன் செல்லும் நவீன ஏவுகணை.
ஓவியம் உயிர் பெற்றால் பேசும் “மகளே இதோ நாங்கள் இங்கே தான் இருக்கிறோம்” என்று.
கலகல சிரிப்பில் அன்னை தெரிகின்றார்.
நற்பண்பில் தந்தை தெரிகின்றார்.
சாதனைகளில் தந்தை வெளிப்படுகின்றார்.
உறவுகளை பேணுவதில் அன்னை மிளிர்கின்றார்.
விண்ணுலகில் தொல்காப்பியரும், திருவள்ளுவரும் உங்களை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள் அனுதினமும்… ஏன் தெரியுமா? இங்கே உங்கள் மகள் தூவும் தமிழ் விதைகள் அங்கே விருட்சமாகி கனிகளை கொடுத்து அவர்களை மகிழ்விக்கின்றது என்பதை அறிவீரோ?
இறைவன் குறைவான அவதாரம் தான் எடுத்தான். ஆனால் தாங்கள் எப்படி இத்தனை மாணவர்கள் வடிவில் வந்து கொண்டே இருக்கிறீர்கள்? ஆச்சரியமாக இருக்கிறது..!!
வணக்கத்துடன்
ஆசிரியர் சிற்பி
