நன்றியும் அன்பும்
ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்
தொல்காப்பிய சாதனையில்
கத்தார் ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் பட்டிமன்றம் நேரலையில்
தோழர்களே
தொல்காப்பியம் குறித்த உங்கள் பார்வையை கட்டுரையாக எழுதி [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். கத்தார் ஆம்பல் தமிழ்ச்சங்கம் அதனைப் பெருமையுடன் பதிவேற்றம் செய்ய உள்ளது. நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை யூனிகோட் பார்மெட்டில் அமையவேண்டும். கட்டுரைக்குக் கட்டணம் கிடையாது. ஆனால் நூல் தேவையெனில் விலைகொடுத்துப் பெறலாம்… தொடர்புக்கு..🙏
உங்கள் படைப்புகளை பகிர,
உங்கள் படைப்புகள் ஆம்பல் வெப்சைட்டில் பதிவு செய்யப்பட்டு, அதன் இணைப்புகள் இங்கே தான் பதிவு செய்யப்படும்,
உங்களுக்கான சான்றிதழ்கள் இங்கே தான் பகிரப்படும்
ஆதலால் உடனே இணைந்து கொள்ளுங்கள்.
விலையில்லாமல் திறமையை மட்டும் பார்த்து ஆம்பல் தமிழ்ச்சங்கத்தால் தரப்படுகின்ற சான்றிதழ்களும்
விருதுகளும்
ஒருமுறை மட்டுமே பகிரப்படும்
ஆவணங்களை நாம் முறைப்படுத்தி இருந்தாலும், அவைகள் அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் மட்டுமே கிடைக்கும் இருக்கும்.
தனிப்பதிவுகளில்
திரும்ப திரும்ப அனுப்புவது சிரமம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்
சமயங்களில் ஐந்து வருடம் கழித்துக் கூட சான்றிதழை கேட்பவர்கள் இருக்கிறார்கள்
அதன் தேவைகள் அவ்வாறு இருக்கின்றன.
ஆதலால் முறையாக கையாளுவோம்
புரிதல்களுக்கு நன்றி
தீர்ப்பு தான் ஒரு பட்டிமன்றத்தில்
அச்சாணி
பல நீண்ட வருடங்களுக்கு அதை சொல்லும் விதமும், அதற்காக நீங்கள் தரும் விளக்கமும்.
நேரம் எடுத்து, ஒவ்வொரு பேச்சாளரின் உரையை கவனித்து, ஆங்காங்கே அவர்களுக்கு ஆமோதித்து, சிலவற்றை சுட்டிக் காட்டி, உங்களின் அனுபவத்தை பயன்படுத்தி இலக்கியத்தையும் இணைந்த இதயங்களையும்
இரட்டைத் தண்டவாளங்களாக கொண்டு செல்வது மிக அரிய பணி.
அழகாக அந்தத் தேரை வலம் வரச் செய்தீர்கள் இராஜமாதா அவர்களே
எட்டு குதிரைகளை அழகான வடம் பிடித்து
ஒற்றை நேர்கோட்டில் செலுத்தி இருக்கிறீர்கள்
அவர்களின் நேரம் பத்து நிமிடமாக இருந்தால் உங்களின் நேரம் நூறு நூற்றைம்பது நிமிடங்களாக….
அவர்களின் தயாரிப்பு ஒரு வாரமாக இருத்திருந்தால் உங்களின் தயாரிப்பு பல மடங்கு
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்
ஆகச் சிறந்த தீர்ப்பு
வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் அம்மா
ஆனால் பணி நிறைவடைய வில்லை.
விரைவில் பேச்சாளர்கள் அனுப்பும் படைப்புகளில் சிறந்த மூன்றை தேர்ந்தெடுத்து
ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் விருது பட்டியலில் அவர்களை இணைக்க உதவுங்கள்.
இறை வாழ்த்தும்
வரவேற்பும்
சிறப்புரையும்
தலைமை உரையும் கூட
*எழுத்தால், ஒலி,ஒளியால் இணைந்தால் அதை நீண்ட நாட்களுக்கு நம்மால் காக்க முடிந்தால் சிறப்பு.
தொல்காப்பியம் தலைமுறைகள் பல கடந்து
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறது
நம்மால் முடிந்தது
இந்த நிகழ்ச்சியை சில பல ஆண்டுகளாவது எடுத்துச் செல்ல முயற்சிப்போம்
நன்றியும் அன்பும்
முனைவர் ரவி கோவிந்தராஜ்
