Photo Contest Label the Tree, Become a Care taker, Take a picture, Post it in Aambal s Facebook page & Win an Award . SUSTAINABILITY CHAMPION வணக்கம் தோழமைகளே.
மரம் வளர்ப்போம் என்கிற திட்டம் மூலமாக ஒரு புகைப்பட போட்டி ஒன்றை கொண்டு வர முயற்சிக்கிறோம்.
புதிய மரங்களை (விதைகளை/செடிகளை)நடுவதும், பழைய மரங்களைத் தத்தெடுப்பதும். ஒவ்வொரு செடி/கொடி/மரங்களுக்கு ஒரு லேபிள் சூட்டப்பட வேண்டும்.
அந்த லேபிள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
ITC & ATSQ presents SUSTAINABILITY.
Let’s Save Trees
CARE TAKER
(Country Name)
(District Name)
(School/college name)
(Your name)
The photographs to be posted in ஆம்பல் தமிழ்ச்சங்கம் Facebook page & Aambal Tamilsangam website
https://www.facebook.com/aambaltamilsangam?mibextid=ZbWKwL
INTEGRAL TRAINING Centre & QatarAambal Tamilsangam will present the
SUSTAINABILITY CHAMPION Award.
Competition duration 2023 May
பிச்சை (தாய் போட்டது)
என் தாய் எனக்கு அளித்த பிச்சையாம் உயிரையும் எழுத்தையும் பிணைத்துக் கிளம்பும் என் உள்ள உளறல்கள்
இவை …
என் தாய்க்கு சமர்ப்பணம் …
அழகு
முடி வாரி முகச் சாயம் பூசும் வேளை
என் தாயின் ஒரு நொடி முக பாவம் பேரழகு
தள்ளாத வயதில் என் அப்பத்தாவின் தொங்கிய
தோல்களின் சுருக்கங்கள் அழகோ அழகு!
நடை வரா நம் மழலைச் செல்வங்களின்
பிறழ் நடை கொள்ளை அழகு!
நீண்ட நேர தேடலுக்குப் பின் கவிஞனுக்குக்
கிடைக்கும் நம் தாய்மொழி வரிகள் கவின் அழகு!
அவ்வப்போது அப்பாக்கள் அடிக்கும் அலுவலகப் பொய்கள் அழகு!
துன்புறும் சமயம் துடித்துதவும் உள்ளங்கள் அழகு!
தோளோடு தோளாய் நம்மொடு நிற்கும் இல்லத்தரசிகளின் சேவைகள் அழகு!
நம்மை காக்க தன்னை வருத்தும் நம் எல்லை சாமிகளின் வீரம் மற அழகு!
முத்தாய்ப்பாய் என் குல சாமி பன்னிரு கையனின் திரு நாமமே அழகு!
Great Chief