
மத்திய அரசின் பட்ஜெட்டில், நீண்டகால மூலதன ஆதாய வரி (LTCG: Long Term Capital Gain) செலுத்தும் முறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதன் மூலம், இனி நீங்கள் ஈட்டும் லாபத்திற்கு கட்டும் வரியை ஒரு மடங்கு வரை சேமிக்க முடியும். எளிய உதாரணத்துடன், பழைய வரி நடைமுறைக்கும் புதிய வரி நடைமுறைக்கு உள்ள வித்தியாசத்தை இங்கே பார்க்கலாம்
பழைய நடைமுறை
சரி நீண்ட கால மூலதன ஆதாயம் என்றால் என்ன? ரொம்ப சிம்பிள்ங்க… உங்கள்ட்ட காசு இருக்கு ஒரு நிலம் வாங்கி போடுறீங்க… ஒரு பத்து அல்லது 15 வருஷம் கழிச்சு வித்தா லாபம் கிடைக்கும்னு நினைச்சு முதலீடு பன்றீங்க இல்லையா? இதுல கிடைக்கிற லாபம்தான், நீண்டகால மூலதன ஆதாயம்…
அதாவது வாங்கிய நிலத்தை விற்கிறது போது லாபம் கிடைக்கும் இல்லையா? அதுக்குதான் சிஐஐ எனப்படும் ‘காஸ்ட் இன்ப்ளேஷன் இண்டெக்ஸ்’ (CII: Cost Inflation Index) என்ற குறியீட்டு மதிப்பின் முறைப்படி வரி கட்டனும்…
இதுதான் பழைய நடைமுறை… இதற்கான வரி 20 சதவீதமாக இருந்தது…
புதிய முறை
இப்போது, காஸ்ட் இன்ப்ளேஷன் இண்டெக்ஸ் குறியீட்டு மதிப்பை நீக்கிட்டு, லாபமாக கிடைக்குற மொத்த தொகைக்கும் 12.5 சதவீதம் வரி கட்டணும்னு மாத்திட்டாங்க… இதனால்தான் லாபம்னு சொல்றேன்…
சரி, காஸ்ட் இன்ஃப்ளேஷன் இண்டெக்ஸ் குறியீட்டு மதிப்பை யார் நிர்ணயிக்கிறாங்கனா… மத்திய நேரடி வரிகள் வாரியம் தான். 2001 – 2002 நிதியாண்டில் இருந்து 2024 – 2025 நிதியாண்டு வரைக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் நிர்ணயிச்சிருக்காங்க… இதை வச்சுதான் நமக்கு கிடைச்ச லாபத்துக்கு வரி கட்டிட்டு வந்தோம்…
Financial Year – Cost Inflation Index (CII)
2024-25 – 363
2023-24 – 348
2022-23 – 331
2021-22 – 317
2020-21 – 301
2019-20 – 289
2018-19 – 280
2017-18 – 272
2016-17 – 264
2015-16 – 254
2014-15 – 240
2013-14 – 220
2012-13 – 200
2011-12 – 184
2010-11 – 167
2009-10 – 148
2008-09 – 137
2007-08 – 129
2006-07 – 122
2005-06 – 117
2004-05 – 113
2003-04 – 109
2002-03 – 105
2001-02 (Base Year) – 100
இனி இது கிடையாது…சரி, உதாரணம் பார்க்கலாம்…
நீங்கள் முப்பது வருடம் முன்பு சொத்து வாங்கி இருந்தாலும், அந்த சொத்தின் மதிப்பை 2001-2002ஆம் ஆண்டுக்குரிய 100 ரூபாய் என கொள்வர்… இந்த 100 ரூபாய் அடுத்தடுத்த ஆண்டுகளில் உயர்ந்திருக்கும்… இதுவே நடப்பு ஆண்டில் 363 ரூபாய் என கணக்கிடுவர்…
கணக்கீடு செய்வது எப்படி?
(விற்கப்போகும் ஆண்டின் மதிப்பு/வாங்கிய ஆண்டின் மதிப்பு) × வாங்கிய நிலத்தின் மதிப்பு
அதாவது, 2001ஆம் ஆண்டு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சொத்தின் மதிப்பு, கடந்த 2023-24 நிதியாண்டில் 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் என கணக்கில் கொள்வர்… கணக்கீடு: (348/100)×1,00,000 = 3,48,000
இதை நீங்கள் இப்போது 22 லட்சம் ரூபாய்க்கு விற்றால், 18 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் லாபம்… (22,00,000 – 3,38,000=18,52,000). இதன் மீது 20 சதவிகித வரி என்றால், மூன்று லட்சத்து 70 ஆயிரத்து 400 ரூபாய் கட்ட வேண்டும்… (சதவிகித கணக்கீடு: 18,52,000×20÷100)
தற்போது இண்டெக்ஸ் குறியீட்டு மதிப்பு நீக்கப்பட்டு, சொத்தை விற்றதில் கிடைத்த லாபமான 21 லட்சம் ரூபாய்க்கும் (₹1லட்சத்துக்கு வாங்கிய நிலத்தை ₹22 லட்சத்துக்கு விற்கிறீங்க) 12.5% வரி கட்ட வேண்டும். இதன்மூலம் இரண்டு லட்சத்து 62ஆயிரத்து 500 ரூபாய்… (சதவிகித கணக்கீடு: 21,00,000×12.5÷100) அதாவது, ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 900 ரூபாய் மிச்சப்படுத்தலாம்… இப்போது இந்த வரி மாற்றம் உங்களுக்கு இலாபமா? நஷ்டமா?
நன்றி: இணைய வழி ஊடகமும், செய்தித்தாள்கள் போன்ற வெளிப்புற ஊடகங்களும்