Previous
Next

ஆம்பல் தமிழ்ச்சங்கம்

நல்லதைப் பார்த்து, நல்லதைக் கேட்டு, நல்லதைப் படித்து, நல்லதை பகிரும் எண்ணத்துடன் 2004 வருடம் துவங்கப்பட்டு வேலை தேடுபவர்களை, பல்வேறு நிறுவனங்களில் காலியாக உள்ள வேலைகளுடன் இணைக்கும் பணியில் எந்தவொரு பண பரிவர்த்தனைகள் எதுவும் இல்லாமல் இலவச சேவைத்தளமாக 2004 யில் துவங்கப்பட்டுகிட்டத்தட்ட 15000 கிற்கும் அதிகமானவர்களை வேலையில் அமர்த்தி அவர்களின் குடும்பங்களில் விளக்கை ஏற்றி வரும் வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்கம்.

ஆம்பல் தமிழ்ச்சங்கம் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளூர் திறமைகளை உலக மேடைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அறிவோம் ஆயிரம், அருகாமையில் ஆளுமைகள், மற்றும் ஒரு குடைக்குள் மழை என்கிற தலைப்புகளின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகளை இணைய வழியில் செய்து வருகிறது.


அறிவோம் ஆயிரம் – கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பதற்கு இணங்க நாம் நிறைய கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இசை வகுப்புகள், யோகா வகுப்புகள், மொழி வகுப்புகள், கணிதம், அறிவியல், போட்டித் தேர்வுகள் மற்றும் பாடம் சார்ந்த வகுப்புகள் என்று ஏழு கண்டங்களில் உள்ள 64 நாடுகளை இணைத்து 5000 க்கும் மேற்பட்ட முனைவர்களையும் 10000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பேராசிரியர்களையும் 25000 க்கும் மேற்பட்ட மாணவர்களையும் இணைத்து இலவச பாடங்கள் போதிக்கிறோம்.

அருகாமையில் ஆளுமைகள் – தனக்கு உள்ள திறமைகளையும் தன் குடும்பம் நண்பர்கள் மற்றும் சுற்றம் என தன்னை சுற்றியுள்ளவர்களின் திறமைகளை உணர வைத்து அதை உலக மேடைக்கு கொண்டு செல்லும் ஒரு தளமாக விளங்குகிறது.

ஒரு குடைக்குள் மழை – ஏழு கண்டங்களில் உள்ள 64 நாடுகளை இணைத்து 5000 க்கும் மேற்பட்ட முனைவர்களையும் 10000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பேராசிரியர்களையும் 25000 க்கும் மேற்பட்ட மாணவர்களையும் இணைத்து, இணைய வழியில்தொடர்ந்து30 மணி நேரம் பட்டிமன்றம்25 மணி நேரம் இசைக்கருவிகள் வாசித்தல்51 மணி நேரம் தந்தைக்கு கடிதம் எழுதுதல் 57 மணி நேரம் நாட்டுப்புற கலைகள் வளர்த்தல் 72 மணி நேரம் நடனம் ஆடுதல் 145 மணி நேர பட்டிமன்றம்1330 திருக்குறள் மனித எழுத்து வடிவில் 709 மாணவிகளை நிற்க வைத்து , திருக்குறளை எழுதி சொல்ல வைத்த சாதனை என்று பல்வேறு சாதனைகளை உள்ளிட்ட 37 உலக சாதனை நிகழ்ச்சிகளை வடிவமைத்து ஒருங்கிணைத்துஉலக சாதனையை படைத்திருக்கிறது.

Videos

Announcements

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist