வணக்கம் உறவுகளே
ஆம்பலின் துவக்கம் வேலை வாய்ப்பாக இருந்தாலும் அடுத்தடுத்த தளங்களில்
அறிவோம் ஆயிரம் தலைப்பின் கீழ் அனைத்து கலைகளையும் கற்பிக்கும் ஒரு தளமாகவும்,
அருகாமையில் ஆளுமைகள் தலைப்பின் கீழ் நமக்குள்ளும், நம்மைச் சுற்றிலும் உள்ள திறமைகளை கண்டறியும் ஒரு தளமாகவும்,
ஒரு குடைக்குள் மழை என்ற தலைப்பின் கீழ் கண்டறிந்த அந்த திறமைகளை உள்ளூர் மேடையிலிருந்து உலக மேடைக்கு கொண்டு செல்லும் தளமாகவும் செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.
கவியரங்கம், கருத்தரங்கம், பேச்சரங்கம், பட்டிமன்றம், சுழலரங்கம் சொல்லரங்கம், வழக்காடு மன்றம் என்ற அரங்குகள் எல்லாமே பேச்சுத் திறமையை வளர்ப்பதற்கான தளமாகவும்
இசையரங்கம், பாட்டரங்கம், மொழியரங்கம் யோக அரங்கம், சதுரங்கம் என்பவைகள் மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் தளமாகவும் செயல்பட்டுக் கொண்டு வரும் வேளையில்
எழுத்தாளர்களுக்கான இரு வேறு தளங்களை இங்கே அறிமுகப்படுத்துவதில் உங்களோடு இணைந்து நானும் மகிழ்கிறேன்
ஆம், உலக புத்தக நாளான இன்று, உலக எழுத்தாளர்கள் அத்தனை பேரும் பயன் பெறும் வகையில்
ஆம்பலின் இணைய வழி பக்கமும் – ஆம்பலின் வையக விரிவு வலை Website மற்றும் ஆம்பலின் மின் இதழும் ஆம்பலின் இலக்கியச் சங்கமம் என்கிற பெயரில் இன்று புதியதாக பிறக்கிறது.
தினம்தோறும் எழுத்துச் சித்தர்களால் உருவாக்கப்படும் அத்தனை எழுத்துக்களும், ஆம்பலின் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு, அதில் ஆகச் சிறந்த படைப்புகளை மின் இதழுக்கு பரிமாற்றும் பாலமாகவும் இருக்கும்.
தொடர் கட்டுரைகள், எழுத்தோவியங்கள்,
துணுக்குகள், பொன்மொழிகள்,
கவிதைகள், நாட்களின் சிறப்பு, மாதங்களின் சிறப்பு, ஊர்களின் சிறப்பு, நாடுகளின் சிறப்பு, உணவு, இயற்கை, உழைப்பு, நேர்மை என உலகின் அத்தனை நல்ல விடயங்களும் சங்கமிக்கும் ஒரு தளமாக ஆம்பலின் இலக்கியச் சங்கமம் விளங்கட்டும்.
அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை
வாருங்கள் வாருங்கள்
“உங்கள் பேனா முனையின் கூர்மையின் பலத்தை உணர்ந்து
நாட்டை நல்லதொரு பாதைக்கு வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்கமாக உங்கள் எழுத்துக்கள் பொன்னெழுத்துக்களால் வரலாற்றில் தடம் பதிக்கட்டும் என்று வாழ்த்தி
மணலிலும், பாறையிலும், சுவடியிலும், ஏட்டிலும் எழுதித்தள்ளிய
நமது முன்னோர்களை நினைவு கூர்கிறேன்.
இதை சாத்தியமாக்கிய இறைவனுக்கும்
அத்துனை ஆளுமைகளுக்கும் நன்றியும், அன்பும், மகிழ்ச்சியும், பாராட்டுகளும்.
உலக சாதனையாளர், அம்பாசிடர்,
முனைவர். ரவி கோவிந்தராஜ்