ஐந்து முதல் எட்டு வயதுக்குள் நீச்சல் சொல்லிக் கொடுங்கள். தன்னை காத்துக் கொண்டு, பிறரையும் காப்பாற்ற முடியும்.
சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்க காட்டும் ஆர்வத்தில், ஒரு பங்காவது நீச்சல் சொல்லி தரவும் காட்டுங்கள். ஏனெனில் இரண்டுமே, உடம்பை பேலன்ஸ் செய்தால் தான் வரும்.
பத்து வயதில், ஒரு குக்கரில் சாதம் வைக்க, காய்கறி நறுக்க பழக்குங்கள். பின்பு மெல்ல மெல்ல One Pot One Shot (OPOS) சமையல் முறையை பரிச்சயப்படுத்துங்கள். சிம்பிளா ஒரு கலந்த சாதம் – தேங்காய், எலுமிச்சை, வெஜ் ரைஸ், தக்காளி சாதம் செய்யும் சமையல் முறை தான் இது.
பிரட் ஆம்லெட் போட சொல்லிக் கொடுங்கள். கையில் பிங்க் நிற 2000 ரூபாய் நோட்டுகளோ, பச்சை வர்ண டாலர்களோ கத்தையாக இருந்தாலும், சில இடங்களில் ரொட்டி தவிர எதுவும் கிடைக்காது.
தான் சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அதுக்கு நீங்க, முதலில் உங்க தட்டை கழுவனும்.
சமைத்த பாத்திரங்களையும், கழுவ சொல்லிக் கொடுத்தால் போனஸ். பையன் எதிர்காலத்தில் நல்ல பொறுமைசாலியாக திகழ்வான்.
பையனின் மேட்ரிமோனி பக்கத்தில் உள்ள “இன்ன பிற தகுதிகள்” என்ற இடத்தில் “சமைக்க தெரியும், பாத்திரம் கழுவவும் தெரியும்” என்று நிரப்பி இருந்தால், இப்பவே பெண்ணை பெற்றவர்கள் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சம்பந்தம் பேச வருகிறார்களாம்.
இன்னும் பத்து வருடம் கழித்து சொல்லவே வேண்டாம். “ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது” என்று உங்கள் மகன் பாடுவார்.
வாசித்தல் என்ற போதை பழக்கத்தை ஏற்படுத்துங்கள். முடிந்தால் வீட்டில் ஒரு நூலகம் அமைக்க உதவுங்கள்.
அப்பா அம்மாவுக்கு மாதாமாதம் பணம் கொல்லைப்புற வேப்ப மரத்தில் காய்க்க வில்லை என்று தெரியப்படுத்துங்கள்.
15 வயதில் அவர் தனியாக சேமிக்க வழி செய்யுங்கள்.
பேருந்து, மின்சார ரயில் என எதிலும் பைசா கோபுரம் போல சாயாமல் இரண்டு கால்களில், தஞ்சை பெரிய கோவில் போல நேராக நிற்க சொல்லிக் கொடுங்கள்.
உங்கள் மகன் மீது 50 KG தாஜ்மகாலே சாய்ந்தாலும், தைரியமாக சுட்டிக் காட்டவும் சொல்லிக் கொடுங்கள்.
கோபம் வந்தால், எதிராளியின் தாயை, தமக்கையின் மானத்தை குறிக்கும் வசைச் சொற்களை பயன்படுத்துவது தமிழுக்கு இழுக்கு என்று சொல்லிக் கொடுங்கள்.
அது வட்டார வழக்குமல்ல, அவரது இயலாமையே(Impotency)
“ஒருவன் பிறருக்கு கொடுப்பதை எல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்”. -ரமண மகரிஷி
விதண்டாவாதம் புரிபவரை கடந்து போக, ஒரு சிறு புன்னகை போதும். பதிலுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தால், முட்டாள்களின் எண்ணிக்கை தான் கூடும்.
ஒருவர் வாயை திறந்தாலே, பார்வையாளருக்கு அவரது மேதமை அல்லது பேதைமை தெரிந்து விடும்.
NO means NO என்பதை விட NEVER என்று சொல்லி கொடுங்கள். பட்டாம்பூச்சியே தேடி வந்து நம் தோளில் அமர்ந்தாலும், அதை கையில் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
முனைவர். நளினி ரவி
ஆண்பிள்ளைகள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டிய கலைகளில் நீங்கள் கூறிய அனைத்து கலைகளும் மிகவும் முக்கியமானவையே.
நடைமுறை காலங்களில் தாங்கள் தெரிவுப்படுத்திய கலைகள் அனைத்தும் ஆண் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தாங்கள் கூறிய கலைகளை 5 முதல் 8 வயதில் கற்றுத்தர வேண்டியது என்று கூறிய கருத்து மிகவும் உண்மையானது. ஏனெனில் 5-இல் வளையாதது 50 -இல் வளையாது.
Great Thank you
அருமை அருமை
மிகச் சிறந்த பதிவு திருமதி நளினி ரவி அவர்களே. ஆண்பிள்ளைகள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டிய கலைகளில் நீங்கள் கூறிய அனைத்து கலைகளும் மிகவும் முக்கியமானவையே.
நடைமுறை காலங்களில் தாங்கள் தெரிவுப்படுத்திய கலைகள் அனைத்தும் ஆண் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Superb dear congratulations have a wonderful working