கத்தார் ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் சிங்கப்பெண் விருது பெற்றவரும்
பட்டிமன்ற நடுவராக சிறப்பான தமிழ்ச்சேவை ஆற்றியவருமான
தொண்டாமுத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழ் நிலா வே.சண்முகதேவிஅவர்களின் பாரதிவரியும் பாவையின் வாழ்வும் நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை வெள்ளலூர் வாசி யோக மையத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சிக்கு நூலாசிரியர் வரவேற்புரை வழங்க, பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை திருமதி தீஸ்மா வெளியிட்டு,
பெண்கள் வாழ்வு என்பதைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது பாரதியைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. அப்படி பாரதியின் வரிகளை எடுத்து பெண்களின் வாழ்வோடு தொடர்பு படுத்தி எழுதி இருப்பது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.
பெண்களுக்கும் பெண்களைப் போற்றும் ஆண்களுக்கும் என்ற நூலின் முகவுரையே நூலின் தன்மையை எடுத்துக் கூறுகிறது என நூலின் பெருமைகளை நூலை பெற்றுக்கொண்ட தாய்ப்பால் தானம் தன்னார்வலர் திருமதி. கலைவாணி அவர்கள் பேசினார்கள்.
.வெண்ணிலா கவி மன்றத்தின் கவியகம் மணிவண்ணன் அவர்கள் நூலாசிரியர் சொற்களை கையாண்ட விதம் பற்றியும் நூலின் தன்மை பற்றியும் பாராட்டிப் பேசினார்.
நூலாசிரியர் தமிழ் நிலா அவர்கள் தொடர்ந்து பல நூல்கள் படைக்க தன்னுடைய வாழ்த்துக்களை வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பாலன் தெரிவித்தார்.
முனைவர் லட்சுமி துர்கா அவர்கள் நன்றி நவில, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது



