பரம்பு மலையின் தலைமை ஆட்சியே
சிவகங்கை மாவட்ட கிராமங்களின் அரசாட்சியே
பாண்டியநாட்டில் திருவாதூரில் பிறந்தவரே
கபிலரை நெருங்கிய நண்பராய் கொண்டவரே
இரவாப் புகழுடன் விளங்கிய மன்னரே
பரம்பு மலையை ஆட்சி செய்த சிகரமே
புகழ் பரவி கிடந்த தென்னகமே
கல் வெட்டுகளில் இன்னும் வாழ்ந்து
வரலாற்று பெருமைக்குரிய வம்சமே
முல்லை படர முயற்சி எடுத்தவரே
எடுத்த முயற்சியில் உயர்ந்து நின்றவரே
கொடி வளர தேர் தந்தவரே
தனித்துவம் தாங்கி நீண்ட திருத்தொண்டவரே
உயர்வு தாழ்வு இன்றி மக்களை
சமமாய் எண்ணி நடத்திய புனிதரே
கொடைத்தன்மையின் அடையாளச் சின்னமாய்
வாழ்ந்து மக்களின் மனங்களில் வாழ்பவரே
கடையேழு வள்ளல்களில் ஒருவராக இருப்பவரே
பகைக்கு அஞ்சாவது வாழ்ந்த வீரரே
அங்கவை சங்கவையை மகளாக கொண்டவரே
மூவேந்தரின்
சூழ்ச்சியில் உயிரை விட்டவரே
அரசர்களின் பொறாமைக்கு தகுந்த பாரியே
வள்ளல்களின் மதிப்பை பெற்ற உயர்ந்தோனே
திருப்புகழ் ஏற்ற சான்றோனே
கவிஞர் முனைவர் சை.சபிதா பானு காரைக்குடி ஆங்கில ஆசிரியை
ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்