பாம்புக்கு வீடு கட்டும் தச்சன் யார்
எவ்வியூர் இருக்கு வடிவம் கொடுத்தது யார்? பாம்பு தச்சணா என கேட்டார்
கபிலர்.
பாம்புக்கு வீடு கட்டும் தச்சன் யார்?எனத் திருப்பி கேட்டான் நீலன்.
“கறையான்” என்றார் கபிலர்.
கறையான் கட்டியுள்ள புற்றை போல, ஆதி மலையின் நடுவில் உள்ள கரும்பாறையைச் சுற்றிப் பாறையோடு பாறையாகச் சற்றே குடைந்து, முன்னால் புற்று மணலால் சுவர் எடுத்து மரச் சட்டகங்களால் வடிவமைக்கப்பட்ட வீடுகளைக் கொண்டது எவ்வியூர்.
கார்காலத்தில் மழை கொட்டி தீர்த்தாலும் உச்சியில் இருந்து கீழ் நோக்கி பாய்ந்து ஓடும் சிறுதுளி கூட தேங்காது.
சுட்டமண் மலைக்கு உறுதியானது நெருப்பை உள்வாங்கும் ஆனால் தாங்காமல் இளகி உருகும் .ஆனால் புற்று மண் நெருப்பை ஒட்ட விடாது விலக்கிக் கொடுக்கும் நீரும் நெருப்பும் ஒன்று செய்து விட முடியாத ஒரு கட்டுமானம்.
இவற்றுள் மிக வியக்க வைப்பது எவ்வி கட்டி உள்ள அரண்மனை அது நேரில் பார்த்தால் தான் உமக்கு புரியும் என்றான் நீலன்.
பார்த்ததன் வியப்பு பார்க்காததன் மீதேபடிகிறது
வேள்பாரி நூலிலிருந்து………
