சிவகங்கை சீமையிலே
சிங்கம்புணரி அருகினிலே
பிரான் மலையில் கோட்டை கட்டி
பெருங்குணத்தின் கொடைகாட்டி
பாரி என்ற சிற்றரசன்
பார் புகழ ஆண்டு வந்தான்
பாடிவரும் புலவருக்கும்
நாடி வரும் அனைவருக்கும்
கொடை அளித்து கரம் சிவந்த
கொடை வள்ளல் பாரி என்று
தென்னகத்து கவிஞர் எல்லாம்
தேடி தினம் வருகையிலும்
தமிழ் கொடி வேந்தனுக்கு
தமிழ் தாகம் தீரவில்லை…
வாழ்க தமிழ்!
பரவட்டும் பாரியின் புகழ்!
அ.ஆயிஷா சித்திக்கா
8″ம்”வகுப்பு “ஆ”பிரிவு
முகம்மதியா மேல்நிலைப் பள்ளி
சித்தார்கோட்டை
இராமநாதபுரம் மாவட்டம்.