முஹம்மதியா மேல்நிலைப் பள்ளி
சித்தார் கோட்டை
இயற்கை வளம் நிறைந்த மலை பறம்பு மலை அம்மே!
இனியவனாம் வேள்பாரி ஆண்டமலை அம்மே!
அயர்வின்றி உழைக்கும் மக்களுள்ள மலை அம்மே!
ஔவ்வை முதல் பலர் பாடும் அழகுமலை
அம்மே!
நயமான மூங்கில் நெல் விளையுமலை
அம்மே!
நற்சுவையாம் பனிச்சுனை நீர் கொண்ட மலை அம்மே!
வியக்க வைக்கும் தேனடைகள் மிகுந்த மலை அம்மே!
வேர்ப்பலாக்கள் மனம் பரப்பி ஈர்க்கு மலை அம்மே!
நாட்டு மக்கள் நலமொன்றேநெஞ்சத்தில் கொண்டோன்!
நாடி வந்தோர்க்கில்லையென்று சொல்லாமல் கொடுப்போன்!
கேட்பவருக்கு கேட்டவற்றை உடனளிக்கும் செம்மல்!
கிஞ்சித்தும் மறுத்தறியா பாரியென்ற வள்ளல்!
கோட்டைக்குள் இருந்துகொண்டே
மூவேந்தரோடு!
குன்றாமல் முற்றுகையை எதிர்கொண்ட கோமான்!
பாட்டெழுதும் பாணரைப்போல்வேடமிட்டுச்சென்று,
பாடியமூவேந்தருக்கும்வேண்டியதளித்தான்!
முல்லைக்குத் தேரீந்த கொடைவள்ளல் பாரி
மூவேந்தர் யாசிக்க நல்லுயிரை ஈந்தான்!
வெல்வதற்கு வழிசொன்ன கபிலருளம் நொந்து!
விரக்தியொடு தன்முடிவை தேட நினைத்தாலும்!
வல்லவனாம் தன்நண்பன் பாரியிடம் கொடுத்த!
வாக்கைகாப்பாற்றிடவே மனம்தேறி நின்றார்!
கல் மனமும் இளகிவிடும் தொடர்ந்தகதை கேட்டால்!
கண்ணீரும் கன்னத்தில் வழிந்தோடும் அம்மே!!!
மு.உம்முல் பாத்திமா.
7 ஆம் வகுப்பு ” இ’ பிரிவு
முஹம்மதியா மேல்நிலைப் பள்ளி
சித்தார் கோட்டை-623513.
இராமநாதபுரம்- மாவட்டம்.
தமிழ்நாடு.