வேள்பாரியின் கதை இதுதான்:
மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்துவரும் 14 இனக் குழுக்களுக்கு தலைமையாக வேளிர் குலம். அதன் தலைவன் பாரி. இவனது ராஜ்ஜியம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பறம்பு மலையில் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் மூவேந்தர்கள் சமவெளியில் ஆட்சி செய்கிறார்கள். வேளிர் குலத்தின் வசம் உள்ள தேவவாக்கு விலங்கை மூவேந்தர்களில் ஒருவனான குலசேகர பாண்டியன் அடைய நினைக்கிறான்.
அதில் அவனது துறைமுகம் தீக்கிரையாகிறது. இதனால், சேர, சோழ மன்னர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு, பறம்பு மலையை முற்றுகையிடுகிறான் பாண்டியன். பாரியை மலையைவிட்டு கீழே வரச்செய்ய பாரியின் நண்பனான நீலனையும் பிடித்துவைக்கிறான். பாரிக்கு எதிராக மூவேந்தர்களும் நடத்தும் இந்தப் போரில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதுதான் இறுதி அத்தியாயங்களில் சொல்லப்படுகிறது.
“தமிழ்நாட்டின் வாழ்வாதாரச் சிக்கல்களை அந்த காலகட்ட மனிதர்களும் மன்னர்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை வேள்பாரியிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். மூவேந்தர்கள் வணிகர்களுக்கு ஆதாரவாக இயற்கை வளங்களைப் பற்றிக் கவலைப் படாமல் இருந்த நிலையில், ஓர் இனக் குழுத் தலைவனான பாரி எப்படி இயற்கையைக் காப்பாற்ற எப்படி போராடினான் என்பதுதான் மையப்புள்ளி. அதற்காகவே இந்தத் தொடரை வாராவாரம் படித்துவந்தேன்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையின் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை என கதையின் துவக்கத்தில் ஆசிரியர் வெங்கடேசன் கூறியதைச் சுட்டிக்காட்டும் சுந்தர்ராஜன் அதை அற்புதமாக விவரித்துச் சென்றதுதான் கதையின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்.
இந்தத் தொடரில் வரும் போர்க் காட்சிகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. “போர்க்காட்சிகள் என்றால் புராணங்களில் வரும் மந்திர – தந்திரக் காட்சி பற்றிய பதிவுகள் மட்டுமே இங்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது. நமது வீரக்கலைகள் பற்றி இங்கு முறையாக தொகுக்கப்படவில்லை.”
தமிழ்நாட்டின் வாழ்வாதாரச் சிக்கல்களை அந்த காலகட்ட மனிதர்களும் மன்னர்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை வேள்பாரியிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். மூவேந்தர்கள் வணிகர்களுக்கு ஆதாரவாக இயற்கை வளங்களைப் பற்றிக் கவலைப் படாமல் இருந்த நிலையில், ஓர் இனக் குழுத் தலைவனான பாரி எப்படி இயற்கையைக் காப்பாற்ற எப்படி போராடினான் என்பதுதான் மையப்புள்ளி. அதற்காகவே இந்தத் தொடரை வாராவாரம் படித்துவந்தேன்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையின் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை என கதையின் துவக்கத்தில் ஆசிரியர் வெங்கடேசன் கூறியதைச் சுட்டிக்காட்டும் சுந்தர்ராஜன் அதை அற்புதமாக விவரித்துச் சென்றதுதான் கதையின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்.
இந்தத் தொடரில் வரும் போர்க் காட்சிகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. “போர்க்காட்சிகள் என்றால் புராணங்களில் வரும் மந்திர – தந்திரக் காட்சி பற்றிய பதிவுகள் மட்டுமே இங்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது. நமது வீரக்கலைகள் பற்றி இங்கு முறையாக தொகுக்கப்படவில்லை.”
“கோட்டைகளிலும் அரண்மனைகளிலும் எத்தனை விதமான பொறிகள் இருந்தன என்பதை சிலப்பதிகாரம் பட்டியலிடுகிறது. எதிரிகளை தாக்குவதற்க்கு இத்தனை வகையான பொறிகள் இருந்திருக்குமேயானால் மற்ற ஆயுதங்கள் எவ்வளவு இருந்திருக்கும்? நமது பழந்தமிழ் இலக்கியங்களிலும் வாய்மொழி மரபுகளிலும் ஆயுதங்களைப் பற்றியும், போர்க்கருவிகள் பற்றியும், போருக்கான வேலைப்பாடுகள் பற்றியும் வீரக்கலைகள் பயிற்றுவிக்கும் முறைபற்றியும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டேன். அதனடிப்படையில்தான் இப்போர்க்களக் காட்சியை உருவாக்கினேன்” என்கிறார் சு. வெங்கடேசன்.
நன்றி : ஆனந்த விகடன்