அனைத்து தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது:
பாஜக கூட்டணி வெற்றி: 292
பாஜக:240
தெலுங்கு தேசம்:16
ஐக்கிய ஜனதா தளம்:12
சிவசேனா (ஷிண்டே):7
லோக் ஜன சக்தி:5
__________________
இந்திய கூட்டணி வெற்றி:234
காங்கிரஸ்: 99
சமாஜ்வாதி:37
திரிணாமுல் காங்:29
திமுக:22
ராஷ்ட்ரிய ஜனதா தளம்:3
மக்களவைத் தேர்தல் : குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை வட மேற்கு தொகுதியில் சிவசேனா (ஏக்நாத் அணி) வேட்பாளர் ரவீந்திர வாய்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மக்களவைத் தேர்தல் : அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அசாம் மாநிலம் துப்ரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகிபுல் ஹுசைன் 10.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள்
-சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ் )
வாக்குகள் 7,96,956(வித்தியாசம் -5,72,155)
-சச்சிதானந்தம் (சிபிஎம்) 6,70,149 (4,43,821)
-டி.ஆர்.பாலு (திமுக) 7,58,611 (4,42,009)
-கனிமொழி(திமுக) 5,40,729 (3,92,738)
-அருண் நேரு(திமுக) 6,03,209 (3,89,107)
தேர்தல் ஆணைய அங்கீகாரம்
தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை பெற்று தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது.
கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றிருந்தது.
12 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் அதனை பெற்றது நாம் தமிழர்.
தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் விசிக.
2 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் விசிக.
இந்த தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் பானை சின்னத்தில் விசிக போட்டியிட்டது.
2019இல் ஒரு தொகுதியில் மட்டுமே தனிச் சின்னத்தில் போட்டியிட்டதால் விசிகவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை

👌🏽