சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம் – 2024’ விழா அயலக தமிழர்கள் 8 பேருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 218 சர்வதேச தமிழ்ச் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் பங்கேற்பு 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தை தொடங்கி முதல்வர் வைத்தார்
தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கு என்ன குறை? வெள்ள நிவாரணம், மகளிர் உரிமைத்தொகை பெற்ற பெண்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து அயலக தமிழர் தின விழாவை கொண்டாடுவதில் பெருமை. வெளிநாட்டில் கைது செய்யப்படும் தமிழர்களுக்கு உரிய சட்ட உதவி வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இங்கு முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அன்னையின் குழந்தைகள், எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள்- அயலகத் தமிழர் தின கொண்டாட்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை