A woman from a Brahmin family wants to become the best chef in the country, but to do so, she will have to master making non-vegetarian dishes as well, going against her orthodox family’s beliefs and values.
கோயிலில் பிரசாதம் செய்யும் பிராமண குடும்பத்தில் பிறந்த நாயகிக்கு சமையல் கலை மீது சிறுவயதில் இருந்தே ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே பெரிய சமையல் கலை வல்லுனராக மாற வேண்டும் என நினைக்கும் அவர் அசைவ உணவுகளையும் சமைக்க ஆரம்பிக்கிறார். உணவு என்பது தனி மனித விருப்பம் என்றும் அதை கடவுள் பெயரால் பிரிக்கக் கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த கதையை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.
அன்னபூரணி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தேவதை இவள். அந்த தேவதைகளை கட்டிப்போட்டு வைத்திருக்கும் கட்டளைகள். குண்டு சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட்டச்சொல்லும் பாரம்பரியங்கள். இவைகளைத் தாண்டி, தடை அதை உடை என்பதை, தான் விரும்பும் சமையல் என்ற பாத்திரத்தில் ஆரம்பித்து கதாநாயகி என்ற பாத்திரம் வரை திறம்பட செய்து பார்வையாளர்களின் மனதையும், என்னைப் போன்ற உணவக துறையின் ஊழியர்களையும் பெருமைப்படுத்திய ஒரு திரைப்படம்
உணவு – அதுதானே எல்லாம்.
அன்னபூரணி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அன்னலட்சுமி இந்த இனத்தில் இருந்து இது எப்படி சாத்தியம் என்று கேட்கும் அத்தனை பேருக்கும் ஒரே பதில் சாப்பாட்டில் சாதி மதம் இல்லை. முனைவர் ரவி கோவிந்தராஜ் கத்தாரிலிருந்து


