எனது வீடு எனது நாடு இரண்டும் ஒன்றுதான்…
நிலம் நீல வானம்
இரண்டுக்கும் இடையே உலவும் காற்றாய் உயிர்கள் யாவும்….
கையில் பிடிக்க முடியாத கண்ணுக்கு தெரியாது கண்டு உணர முடியும்…
கானகம் தான் அசைய….
காற்று இருக்கும் வரை ஊற்று குறைவில்லை… கானகம் இருக்கும் வரை காற்றுக்கும் அழிவில்லை…
ஒன்றை ஒன்று கொன்று தின்ற படி வென்று விட்டதாய் வேடமிட்டபடி..
வென்றதையும் கொன்று தீர்க்கும் ஒரு நாள் இந்த மண் என்று உணராமல்…..
குழி பறித்த அரசியல் குன்றி போனது வளங்கள் யாவும்…. குமைந்து போனது நிலங்கள் யாவும்
இன்றியமையாத நீரும் கூட.. இரு விழிகளில் தவிர வேறெங்கும் இல்லை…மேகம் கூட கூட கூடுவதில்லை கூடிட காற்றும் கூட விடுவதுமில்லை….
கருத்தரித்த கார் மழையையும் கரு கலைப்பு செய்யும் காற்று…. இயற்கையின் பெற்றோர் நிலவும் கதிரும்….
நிற்க கூட நேரமில்லை நேரில் சந்திக்க முடிவதில்லை.. பாரில் இன்றைய சந்ததி நிலை… பாதை எங்கிலும் சகதி நிலை…
வீடும் நாடும் வேறில்லை…. விளங்கினால் விளங்கும் நாளை நம் பிள்ளை…
இவண்
ஆற்காடு குமரன்