சுதந்திரம் என்ற சொல் அழகானது.
ஆனால்,
நிகழ்காலத்திற்கு பொருத்தமாக இல்லை.
அனைவரும் எதிர்காலத்தை நோக்கி செல்கிறோம்.
ஆனால், பெண்கள் இன்றும் தங்களது சுதந்திரத்தை நோக்கி செல்கிறார்கள்.
சுதந்திரம் பெற்ற மனிதர்கள் மத்தியில் தனக்கான சுதந்திரத்தை இன்றும் பெண்கள் தேடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
கனவுக்கும், உணவுக்குமே ஓடி உழைக்கின்றோம்.
ஆனால்,
உழைப்பில் கூட பெண்ணுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் இல்லை.
வறுமை உடைய மக்களை கொண்டு, பெருமை கொள்கிறது இந்த சுதந்திரம்!
லஞ்சமும்,
வஞ்சமும்,
பஞ்சமும் கிடைக்கிறது சுதந்திரமாக!
அவரவர் நெஞ்சில் கருணையை விதையுங்கள் சுதந்திரமாக!
ஊழலும்,
கள்ளக்காதலும் அமைகிறது சுதந்திரமாக!
பெண்ணின் பேச்சுக்கும்,
கல்விக்கும் அமையவில்லை சுதந்திரமாக!
மண்ணுக்கும்,
விண்ணுக்கும்,
பெண்ணுக்கும் என மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான் சுதந்திரமாக!
கடைசியில்,
ஒருவேளை பன்னுக்கு தேடி அலைந்து கொண்டிருப்போம் மிக சுதந்திரமாக!
திருமதி என்ற வார்த்தை பெண்ணுக்கு கிடைக்கிறது சுதந்திரமாக!
திருமதிக்கு பின்
வேலையும்,
கல்விச்சாலையும் அமைவதில்லை சுதந்திரமாக!
கட்டிலுக்கும், சமையல்கட்டிற்கும் என தொட்டிலோடு முடிந்துவிடும் விட்டில் பூச்சியாக அல்லாமல், பெண்ணின் முயற்சிக்கும்,
வளர்ச்சிக்கும்,
பாதுகாப்பிற்கும்
வழி செய்வதே சுதந்திரம்!!!
நன்றி!
இப்படிக்கு,
ரா.ஜெயந்தி,
இளங்கலை கல்வியியல் முதலாமாண்டு,
ஸ்ரீ காயத்ரி கல்வியியல் கல்லூரி,
இரும்பாலை சாலை,
சித்தனூர்,
தளவாய்பட்டி,
சேலம்-636302,
தமிழ்நாடு,
இந்தியா.